Home Entertainment Yogi Babu: யோகி பாபு மகன் விசாகனை வாழ்த்தி வரும் திரையுலக பிரபலங்கள்

Yogi Babu: யோகி பாபு மகன் விசாகனை வாழ்த்தி வரும் திரையுலக பிரபலங்கள்

0

Yogi Babu: யோகி பாபு மகன் விசாகன் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

yogi babu

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. தற்போது பிசியாக பால படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது யோகி பாபு வீட்டில் நடைபெற்ற விசேஷம் ஒன்றில் தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் யோகிபாபுவுக்கு மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. யோகி பாபு சொந்த ஊரான செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு கிராமத்தில் எளிமையாக முறையில் யோகி பாபுவின் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக தன்னுடைய திருமண வரவேற்பு விழாவை நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தார்  .

ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி தேதிக்கு இரு நாட்கள் முன்பாக கொரோனா தீவிரமடைந்ததால் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி யோகி பாபு தன் திருமண வரவேற்பு விழாவை நடத்த முடியவில்லை. பிறகு கடந்த டிசம்பர் மாதம் யோகி பாபு மனைவிக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தார். மறுபடியும் அதற்கு முன்னடி ஒரு டிவிஸ்ட் காத்திருந்தது. வளைகாப்பு இருதினங்களுக்கு முன்பாகவே யோகிபாபுவிற்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது.

திருமணம், வரவேற்பு, வளைகாப்பு என படத்தில் வருவதுபோல் திருப்பங்கள் வந்து. எனவே திட்டமிட்ட எதுவுமே நடத்த முடியாமல் போனா நிலை உருவாகியது.  இந்நிலயில் தற்போது யோகி பாபுவின் மகன் விசாகனின் முதல் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார் யோகி பாபு. விசாகனின் முதல் பிறந்தநாள்விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து யோகி பாபு மகன் விசாகனை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் உதயநிதி, பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், பிக்பாஸ் பிரபலம் வருண், என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். யோகி பாபு மகன் விசாகன் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

13.082680280.2707184

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version