Home Entertainment Ajith: அஜீத் சொன்னது கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்

Ajith: அஜீத் சொன்னது கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்

0

Ajith: நேர்கொண்ட பார்வை வியாபாரத்திற்காக எடுத்த படம் இல்லை. ஒரு தந்தை தன் மகளுக்காக எடுத்த படம். அந்த படம் குறித்து அஜித் சார் என்னிடம் சொன்னதே நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன்.

ajith

அஜீத் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் சூப்பர் ஹிட்டானது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். பிறகு இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்த படம் வலிமை. இந்த படம் பொங்கலுக்கு வெளிவர தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை படம் குறித்து வினோத் கூறியிருப்பது. 

நேர்கொண்ட பார்வை படத்தின் கதை வேறு ஒருவருடையது என்பதால் அது மட்டும் இல்லாமல் ரீமேக் படம் என்பதால் அந்த படம் இயக்கும்போது ரொம்ப ரிலாக்ஸாக இருந்தேன். அந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் என்று எனக்கு நம்பிக்கை சுத்தமா இல்லை. ஆனால் அஜித் சார் ரொம்ப நம்பினார். அஜித் சாரின் ரசிகர்கள் மட்டும் இல்ல அனைத்து தரப்பினரும் கொடுத்த அமோக ஆதரவை பார்த்து நான் அதிர்ந்துவிட்டேன்.

நேர்கொண்ட பார்வை பாடத்தை பற்றி அனைத்து தரப்பினரும் பாராட்டி பேசினார்கள். நேர்கொண்ட பார்வை வியாபாரத்திற்காக எடுத்த படம் இல்லை. ஒரு தந்தை தன் மகளுக்காக எடுத்த படம். அந்த படம் குறித்து அஜித் சார் என்னிடம் சொன்னதே நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன். அந்த வார்த்தைகள் என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

என் மகள் இந்த சமூகத்தில் வாழப் போகிறார். அது மட்டும் இல்ல, ஒரு பெண்ணை இந்த சமூகத்தில் எப்படி பார்க்க வேண்டும் என்று  காட்ட விரும்புகிறேன் நான். இது போன்ற படம் கொடுத்திருக்கிறேன் என்று வளர்ந்த என் மகளுக்கு காட்ட நான் விரும்புகிறேன் என்றார் அஜீத் சார்.  என ஹெச். வினோத் தெரிவித்தார்.

11.127122578.6568942

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version