Home Uncategorized Valimai Trailer: மிரட்டலான வலிமை டிரெய்லர்: குஷியில் அஜித் ரசிகர்கள்

Valimai Trailer: மிரட்டலான வலிமை டிரெய்லர்: குஷியில் அஜித் ரசிகர்கள்

0

Valimai Trailer: வலிமை ட்ரெய்லர் வெளியான இரண்டுமணி நேரத்தில் 2.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ட்ரெய்லர்  தொடக்கத்தில் பைக் ரேஸ்சுடன் மிரட்டியுள்ளனர்.

valimai

சினிமாவில் முன்னணி நடிகராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் வருகிற (2022) பொங்கல் பரிசாக வெளியாகியுள்ளது.

அஜித் இதே கூட்டணியுடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பின் அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வலிமை படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. அஜித், ஹிமா குரேஷி நடித்திருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மோஷன் போஸ்டர் 2 பாடல்கள் என தொடர்ந்து வெளியான நிலையில் தற்போது வலிமை படத்தில் இருந்து டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 
இன்று மாலை 6:30 மணிக்கு வெளியான வலிமை டிரெய்லர் பார்ப்பதற்காக தியேட்டர்களில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி பார்த்துவிட்டு வருகின்றன ரசிகர்கள். ட்ரெய்லர் வெளியான இரண்டுமணி நேரத்தில் 2.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில்  ட்ரெய்லர்  தொடக்கத்தில் பைக் ரேஸ்சுடன் மிரட்டியுள்ளனர். வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அஜித் 10 வருடங்களாக தேடிக்கொண்டிருந்த கேங்க 10 நாட்களில் பிடித்துடுவார் என்ற மிரட்டலான வார்த்தைகளோடு அசத்தலான ஃபைட் சீனுடன் வெளியாகியுள்ளது.
 
ஒரு தற்கொலைக்கு பின்னால் மிகப்பெரிய க்ரைம் இருக்கும் என்று கண்டுபிடிக்கிறார் அஜித். ஹிமா குருஷி இந்த படத்தில் அஜிதிற்கு உதவும் ஒரு அதிகாரியாக இருக்கிறார் என்று டிரெய்லர் பார்கும் பொழுது தெரிகிறது. தமிழ் நாடு போலீஸ் ஹான்டல் பன்ற மோசமான கேஸ் இதுவாக தான் இருக்கும் என்று அஜித் சொல்ல, வில்லன் டாக் ஸ்மெல் பண்ணிடிச்சி  என்று வில்லன் கண்டுபிடிக்க மிரட்டலான கட்சிகளுடன் யுவன் பிஜிஎம்யுடன் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version