Home Entertainment Rajinkanth: தலைவர் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது: விக்னேஷ் சிவன்

Rajinkanth: தலைவர் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது: விக்னேஷ் சிவன்

0

Rajinikanth: தலைவர் ரஜினிகாந்த் என்னிடம் ஃபோன் செய்து பேசினார். என்னையும் நயனையும் ராக்கி பாடத்தை வழங்கியதற்காக பாராட்டினார்.

rajini

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல முன்னனி பிரபலங்கள் நடித்துள்ள இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாங்கியுள்ளது.

தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவனை ஃபோன் செய்து பாராட்டியதோடு வசந்த் ரவி பாரதிராஜாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ராக்கி படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சேர்ந்து வழங்கியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ராக்கி படத்தில் நடித்த வசந்த் ரவி, பாரதிராஜாவை அழைத்து தலைவர் ரஜினிகாந்த் சால்வை அணிவித்து பாராட்டியதோடு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு விக்னேஷ் சிவனுக்கு ஃபோன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். தலைவர் ரஜினிகாந்த் என்னிடம் ஃபோன் செய்து பேசினார். என்னையும் நயனையும் ராக்கி பாடத்தை வழங்கியதற்காக பாராட்டினார். 

தலைவர் படம் பற்றி கூறிய வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எங்களுக்கு தலைவரின் வார்த்தைகள் நிறைய நம்பிக்கை குடுத்தது. அந்த ஃபீலிங்கை விவரிக்க முடியாது என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ட்வீட்டை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் தலைவரின் அடுத்த படத்தை இயக்கும், இயக்குனர் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயரை சேர்த்துவிட செத்துவிட்டார்கள். 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version