Home Cinema News Beast New Update: பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இதோ வந்துவிட்டது

Beast New Update: பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இதோ வந்துவிட்டது

0

Beast New Update: விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஒவ்வொரு வருடமும் வெளிநாடு செல்வது விஜய் வைத்திருக்கும் வழக்கம். இந்த நிலையில்தான் விஜய் டப்பிங் பணியை சீக்கிரமா முடித்துக்கொடுத்துள்ளார்.

beast

நெல்சன் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கோலிவுட் சினிமாவில் விஜய் வசூல் மன்னனாக வலம் வருகிறார். விஜய் நடிப்பில் வரும் எல்லாம் படமும் வசூல் சாதனை செய்யும், அவர் வசூல் சாதனையை அவரே முறியடித்து புதிய வசூல் சாதனையை படைத்து வருபவர் விஜய். அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

தறப்போது நியூ இயர் ஸ்பெஷலாக பீஸ்ட் பட பாடல்கள் வெளிவரவுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார. தற்போது எங்கு திரும்பினாலும் அஜித்தின் வலிமை படத்தின் பற்றிய அப்டேட் வந்துகொண்டிருப்பதால். மறுபக்கம் தளபதி விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் பற்றி இணையத்தில் கேட்டுக்கொண்டே வருகிறார்கள்.

பீஸ்ட் பட குழுவினர் இப்படியே போனால் சரிபட்டு வராது என்று பீஸ்ட் படத்தின் நூறாவது நாள் படப்பிடிப்பு தற்போது நிறைவு என்று ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டனர். விஜய் ரசிகர்கள் அதும் போதாது என்று கேக்க. பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவித்து நெல்சன் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டார்கள். 

சோஷல் மீடியாவில் விஜய் ரசிகர்கள், இதுவும் போதாது தற்போது படப்பிடிப்புதான் முடிந்ததே பீஸ்ட் டீசரை வெளியிடுங்கள் என்று மேலும் அன்புத்தொல்லை கொடுத்துவந்தார்கள். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டப்பிங் பணியை முதல் ஆளாக விஜய் முடித்துக் கொடுத்திருக்கிறார். இனி வருபவது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால். விஜய் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஒவ்வொரு வருடமும் வெளிநாடு செல்வது விஜய் வைத்திருக்கும் வழக்கம். 

இந்த நிலையில்தான் விஜய் டப்பிங் பணியை சீக்கிரமா முடித்துக்கொடுத்துள்ளார். இந்த ஆண்டும் விஜய் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர்  கொண்டாட குடும்பத்துடன் லண்டன் பறக்கவிருக்கிறார். விஜய் ரசிகர்கள் விரைவில் படத்தின் டீசர் வரும் என்று எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version