Home Cinema News AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கம் – நயன்தாராவின் சமரசத்தை ஏற்காத தயாரிப்பு நிறுவனம்

AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கம் – நயன்தாராவின் சமரசத்தை ஏற்காத தயாரிப்பு நிறுவனம்

0

AK62: சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடி ஹிட் ஆனது. அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் கடந்த ஆண்டு வெளியானது, இதில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலயில் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு மே மாதம் அஜித் படத்தை இயக்க கமிட்டானார். அதன்பிறகு 8 மாத இடைவெளிக்குப் பிறகுதான் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார். அஜீத் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகமாக இருந்தார் விக்னேஷ் சிவன்.

Also Read: விஜய்யின் தளபதி 67 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

இந்த 8 மாத இடைவெளியில் விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு கதை பிடிக்கவில்லை. இதனால் கடும் சோகத்தில் உள்ள விக்னேஷ் சிவன், படப்பிடிப்பை தொடங்கும் முன்பே லைகா நிறுவனம் விலகியுள்ளது. இந்த செய்தி தற்போது நெட்டிசன்களால் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நயன்தாராவும் சமரசம் செய்ய முயன்றார். முடிவில் உறுதியாக இருந்த லைகா நிறுவனம்நயன்தாராவின் சமரசத்தை ஏற்கவில்லை. AK 62 படத்தின் கதையை அஜித்திடம் சொல்ல நயன்தாரா விக்கியை சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது, ஆனால் தற்போது நயன்தாரா அந்த வாய்ப்பை நழுவவிட்டதாக கூறப்படுகிறது.

AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கம் - நயன்தாராவின் சமரசத்தை ஏற்காத தயாரிப்பு நிறுவனம்

அஜித்தின் AK62 இயக்குனர் யார் என்பதை இன்னும் சில நாட்களில் லைகா நிறுவனம் அறிவிக்கலாம். அஜித்தின் AK62 படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியதாக ஜனவரி 16ஆம் தேதி தகவல் வெளியானது. இதற்கான அறிவிப்பை நெட்ஃபிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜித் ரசிகர்களை குழப்பிய அந்த ட்வீட்டை தற்போது விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளார். விக்னேஷ் சிவன் தான் ஏகே 62 படத்தின் இயக்குனர் என்று சூசகமாக கூறியதாக சிலர் கூறுகின்றனர். தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் இந்த சர்ச்சைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version