Home Cinema News Release Date: பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய படங்கள்

Release Date: பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய படங்கள்

0

Release Date: பீம்லா நாயக் தள்ளிபோவதால் வலிமை,  RRR, ராதே ஷ்யாம் படங்களுக்கு வெளிநாடுகளில் மேலும் கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Pongal movie

2022 பொங்கல் அன்று வெளியிட தயாராக ருந்த திரைப்படங்கள் தற்போது நிலை மாறிவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் வலிமை, RRR, ராதே ஷ்யாம், பீம்லா நாயக் போன்ற மிக பெரிய படங்கள் வெளியாவதால் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா திரைப்படத்தின் வெளியீடு தேதி ஏப்ரல் 1,2022 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பவன் கல்யானின் படம் பீம்லா நாயக்  பொங்கல் ரேஸில் இதன்மூலம்இருந் துதற்போது வெளியேறி உள்ளது. மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் இந்த படத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வந்த படம் தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என ரீமேக்கில் உருவாகி உள்ளது. பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் மற்றும் பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடித்துள்ளார்.

பீம்லா நாயக் படத்தை சாகர் கே சந்திரா இயக்கதில் பவன் கல்யாண் நடித்துள்ளார். தெலுங்கின் முன்னணி  இயக்குனர் மற்றும் எழுத்தாளர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார் இவர் தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நாகவம்சி தயாரிக்கிறார்.  இந்த திரைப்படம் ஜனவரி 12 அன்று மஹாசங்கராந்திக்கு  வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் தற்போது திரைப்படத்தின் வெளியீடு தேதி பிப்ரவரி 25 2022 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பீம்லா நாயக் தள்ளிபோவதால் வலிமை, ராதே ஷ்யாம், RRR, போன்ற படங்களுக்கு இதன்மூலம் கூடுதல் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று குரபடுகிறது. ஜனவரி 7 ஆம் தேதி RRR படம், ஜனவரி 14 ஆம் தேதி ராதே ஷ்யாம் படம்  வெளியாக உள்ளது. வலிமை படத்தின் ரீலிஜ் தேதி அதிகாரப்பூர்வமாக மிக விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.  

 

 

11.127122578.6568942

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version