Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

Dhanush: நடிகர் தனுஷின் வரவிருக்கும் திரைப்படமான திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18, 2022 அன்று திரையரங்குகளில் திரையிடத் தயாராக உள்ளது மற்றும் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 7, 2022 அன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் இப்போது அறிவித்துள்ளனர். Also Read: டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் ஷங்கர் – வைரலாகும் புகைபடங்க https://twitter.com/sunpictures/status/1555554204475076609?s=21&t=68MLI7HeIid1_7P4Kchj5Q சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. Also Read: Suriya: ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Read More

Shankar: தமிழ் மற்றும் இந்திய திரையுலகில் தனது திரைப்படங்கள் மூலம் பல பிரம்மாண்ட படங்கள் மற்றும் புதுமைகளை கொண்டு வந்த இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ள தனது பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தொடர்ச்சியான ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் செப்டம்பர் மாதம் தொடங்குவதாக செய்திகள் வெளியே வந்துள்ளது. Also Read: Suriya: ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா இந்நிலையில், தற்போது சமீபத்திய ஹாட் செய்தியாக. இயக்குனர் ஷங்கருக்கு வேல்ஸ் விஸ்டாஸ் கல்வி நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 12வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சங்கர் நேற்று (ஆகஸ்ட் 5) காலை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் சுரேஷ்…

Read More

Suriya: கமல் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு கேமியோ ரோலில் சூர்யா நடித்திருந்தார். விக்ரம் படத்தில் ஐந்து நிமிடம் மட்டுமே இடம் பெற்ற அந்த ரோலக்ஸ் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மற்றும் பேசப்பட்டது. அதையடுத்து அக்ஷய்குமார் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்திலும் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது ஷங்கர் இயக்கதில் ராம் சரண் நடிப்பில் (RC -15) என்ற படத்திலும் ஒரு கேமியோ ரோலில் சூர்யா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் (RC -15) சூர்யா நடிக்கும் வேடம் 10 நிமிடங்கள் வரை இடம் பெறுகிறதாம். கமல் நடித்த விக்ரம் படத்தை விட சூர்யா நடிக்கும் (RC -15) இந்த கேமியோ ரோலில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படக் கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Read More

Censor banned movies: இந்தக் கதைகள் நாம் வாழும் காலத்தைப் பற்றி பேசத் துணிந்தன, ஆனால் கடுமையாக இந்திய தணிக்கை வாரியம் தடை செய்யப்பட்டது திரைப்படங்களின் நோக்கம் எப்போதுமே முரண்படுகிறது, அவை நம் காலத்தின் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன அல்லது மாற்று உலகத்தை முன்வைக்கின்றன? இந்திய தணிக்கைக் குழு அல்லது மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட இந்தியப் படங்கள் உண்மையைப் பேசத் துணிந்தன. அந்த படங்கள் நிரந்தரமாக தடை செய்யப்பட்டனர் ஆனால் மற்றப டங்கள் பின்னர் OTT இல் வெளியிடப்பட்டனர். 1. Black Friday – Netflix 1993 ஆம் ஆண்டு பம்பாய் கலவரம் இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வன்முறையைக் கண்டது. ஆனால் அதற்கு முந்தியது என்ன? எஸ். ஹுசைன் ஜைதியின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து கொலைகளுக்கும் பழிவாங்கும் விதமாகக் கருதப்பட்ட பம்பாய் குண்டுவெடிப்புக்கான திட்டமிடலின் உள் செயல்பாடுகளை நாம் அறிந்து கொள்கிறோம். 2. Paanch…

Read More

Hansika Marriage: தமிழ் சினிமா கதாநாயகிகளில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன் நடிப்பில் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டு, ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் பிடித்தவர். ஹன்சிகா மோத்வானி நடிப்பில் சமீபத்தில் மஹா திரைப்படம் வெளிவந்தது. ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியை சந்தித்தது. மஹா திரைப்படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி ஜோடியாக இணைத்தார்கள். சிம்பு என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது. Also Read: Rashmika Mandanna: 4 கோடி வாங்கும் ராஷ்மிகா மந்தனா – நான் இன்னும் சிங்கிள் தான் ஹன்சிகா மற்றும் சிம்புவின் காதல், திருமண பேச்சு வரை சென்று பிரேக் அப் ஆனது. அதன்பின் சிம்பு, ஹன்சிகாவின் திருமணம் குறித்து எந்த ஒரு சேதியும் வரவில்லை. தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானி விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹன்சிகா மோத்வானி பிரபல அரசியல்வாதியின் மகனை தான் திருமணம்…

Read More

Dhanush: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டாலிவுட் என்று பலமொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் உலகளவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் அவர் சமீபத்தில் நடித்த ஜகமே தந்திரம், மாறன், அட்ராங்கி ரே ஆகிய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. மாறன் படத்தூக்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன. அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை, அதோடு அவரது படங்கள் ஓடிடியில் வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருக்கின்றனர். Also Read: Rashmika Mandanna: 4 கோடி வாங்கும் ராஷ்மிகா மந்தனா – நான் இன்னும் சிங்கிள் தான் வரிசையாக தோல்வியை சந்தித்த தனுஷ் இப்போது நடிக்கும் படங்களில் வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். நீண்ட வருடங்கள் கழித்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்தில்…

Read More

Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனாவின் கிராஃப் தற்போது எகிறியுள்ளது. புஷ்பா படத்தின் பாடல்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்தன. புஷ்பா வெளியான பிறகு, அவர் தனது இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் (followers) பெற்றார். இது அவரது பிரபலத்தை நிரூபிக்கிறது. Also Read: Maaveeran: சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் வைரலாகும் பூஜை புகைப்படங்கள் பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகள் நிறுவனங்கள் அவரை துரத்துகின்றன. அவரது டிமாண்டைப் பார்த்து ராஷ்மிகா மந்தனா இப்போது படத்திற்கு தன் சம்பளம் அதிக தொகை பணம் கேட்கிறார். புஷ்பா படம் வெளியாவதற்கு முன்பே ரூ.2 கோடி வாங்கிய ராஷ்மிகா மந்தனா. இப்போது, ஹிந்தி படங்களுக்கு 4 கோடி ப்ளஸ் வாங்கி வரும் நிலையில், தெலுங்கு படங்களுக்கு 3 கோடி ப்ளஸ் கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் குறை சொல்லாமல் கொடுத்து வருகிறார்கள். Also Read: Kamal: கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம் ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர்…

Read More

Kamal: உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு உற்சாகம் அடைந்துள்ளர். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் இளவட்டை ஹீரோக்களை வைத்து இதிரைப்படம் தயாரிப்பதிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். Also Read: Maaveeran: சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் வைரலாகும் பூஜை புகைப்படங்கள் தற்போது அந்த வகையில் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51வது படத்தை சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்கும் கமலஹாசன், மேலும் 52 வது படத்தில் தானே நடிப்பதாக முடிவு எடுத்துள்ளார். அந்த படத்தை மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். பிறகு அதையடுத்து 54 வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போவதாக ஒரு மேடையில் கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது அதற்கு முன்னதாக ராஜ்கமல் பிலிம்ஸின் தனது 53வது படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்…

Read More

Maaveran: சிவகார்த்திகேயன் தொடர்ந்து டாக்டர் மற்றும் டான் இரண்டு 100 கோடி கிளப் திரைப்படங்களை வழங்கிய பிறகு தமிழ் சினிமாவில் மிகவும் உச்ச நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். இதற்கிடையில், ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஷ்வினுடன் அவரது அடுத்த படம் ‘மாவீரன்’ (SK22) கடந்த மாதம் ஒரு மாஸ் வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது. பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தனது முதல் படமான விருமன் படத்தைத் தொடர்ந்து ‘மாவீரன்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் ஏற்கனவே செய்தி தெரிவித்தோம். இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும், யோகி பாபுவும் காமெடியனாக நடித்துள்ளார். மூத்த நடிகை சரிதா நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், நேற்று ‘மாவீரன்’ பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது. படத்தின் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஷங்கர், அதிதி மற்றும் நடிகை சரிதா ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது, சமீபத்திய வைரல் செய்தி என்னவென்றால்,…

Read More

Indian 2: உலக நாயகன் கமல்ஹாசன், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்தனர். இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக, படம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டது. Also Read: Aditi Shankar: ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகம் இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 13ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்பது முக்கிய தகவல். தற்போது படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் இன்று இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வை நடத்தினார், அங்கு அவர் செய்தியை வெளிப்படுத்தினார். இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்த படத்தின் மூலம் மீண்டும் காஜல் அகர்வால் தனது கர்ப்பத்திற்கு பிறகு நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் (RC15) படத்தில் பிஸியாக இருக்கிறார். ஷங்கர் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read More