Sony FX3: Netflix ஆல் Sony FX3 கேமராவை அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது. இது இப்போது பல்வேறு மாடல்களான FX9 மற்றும் FX6 உட்பட 13 சோனி கேமராக்களுடன் இணைகிறது. சான்றளிக்கப்பட்ட சோனி கேமராக்களின் முழு பட்டியல் இங்கே கொடுக்கபட்டுள்ளது.
▪️ Sony Venice
▪️ Sony Venice 2 6K
▪️ Sony Venice 2 8K
▪️ Sony FX9
▪️ Sony F55
▪️ Sony F65
▪️ Sony FS7
▪️ Sony FS7 II
▪️ Sony FX6
▪️ Sony PXW-Z450
▪️ Sony PXW-Z750
▪️ Sony FX3
▪️ Sony HDC-F5500
FX3க்கான சமீபத்திய பதிப்பு 2.00 Version firmware புதுப்பிப்பு மற்றும் input timecod திறனை புதுப்பிப்பு செய்யப்பட்டது. FX3 சான்றிதழைப் பெறுவதற்கு சில வழி முறைகள்.
Netflix ஒரிஜினல்களில் பயன்படுத்த, FX3 UHD 3840 x 2160 ஆக அமைக்கப்பட வேண்டும் மற்றும் உள்ளக ரெக்கார்டிங் கோடெக் XAVC S-I 4K (ALL-I) 10-பிட் 4:2:2 ஆக இருக்க வேண்டும். நீங்கள் 4264 x 2408 ProRes RAWஐ வெளிப்புறமாக இணக்கமான Atomos சாதனத்தில் பதிவு செய்யலாம்.
Sony FX3 ரெக்கார்டிங் பிரேம் விகிதங்கள் கேமராவில் உள்ள முழு எண் மதிப்புகளாகக் குறிப்பிடப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உண்மையான தொடர்புடைய பிரேம் விகிதங்கள் பின்பற்றுங்கள்.
24p: 23.98 fps
30p: 29.97 fps
60p: 59.94 fps
120p: 119.88 fps
Sony FX3யை வெளிப்புற timecod மாற்றுவதற்கு சோனி டிசி அடாப்டர் கேபிள் தேவை என்றும், பரிந்துரைக்கப்படுகிறது என்றும் நெட்ஃபிக்ஸ் கூறுகிறது.
நீங்கள் S-Gamut3Cine / S-Log3 அல்லது S-Gamut3 / S-Log3 இல் படமெடுக்க வேண்டும்.
ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களின் கேமரா சான்றிதழ்கள் பற்றிய எண்ணங்கள் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேம். நீங்கள் படத்தின் தரத்துடன் தொடர்புடையதாக இருந்தால், இந்தப் பட்டியலில் வேறு பல கேமராக்கள் இருப்பதை பார்க்கலாம்.