திரைபட இயக்குனராக இருந்து கருப்பு சட்டை அணிந்து நாம் தமிழர் கட்சியின் ஒருக்கினைபாலராகி வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் சென்று மேடை போட்டு கொள்கைகளை பரபிய சீமான் வரம்பு மீறி பேசியதால் சில வழக்குகழில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார்.
திரைபடங்களை இயக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவ்வபோது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சீமான் மீதான பழைய வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் செய்தியாளர்களை சந்திதார் சீமான்.
அப்போது ரஜினி, கமல், விஜய், என்று சினிமா நடிகர்களை பகிரங்கமாக தாக்கி பேசினார். ரஜினியும், கமலையும் அடிக்கின்ற அடியில் விஜய் உள்ளிட்ட எந்த ஒரு நடிகனும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்து விட வேண்டும் என்கின்ற எண்ணம் மாற வேண்டும் என்று சீமான் சுட்டிக்காட்டி பேசினார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள், நீங்களும் நடிகர் தானே சினிமாவில் இருந்து வந்தவர் தானே என்று கேள்வி கட்டபோது, அதற்கு தான் சினிமாவில் இருந்து வந்தாலும் ரசிகர்களை சந்திக்கவில்லை மக்களை சந்தித்தேன் என்று கூறி சமாளித்து பேசினார்.
மேலும் எம். ஜி. ஆர் நல்லாட்சி வழங்கவில்லை கல்வியை தேசிய பட்டியலுக்கு மாற்றியது அவர்தான் என குற்றம்சாட்டினார். அதுமட்டும்மில்லாமல் முல்லை பெரியாறு அணை உரிமையை கேரளாவுக்கு தாரை வார்த்தது எம். ஜி. ஆர் என்று புகார் கூறினார்.