Home Health ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்

0

ரஜினிகந்த நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Pocket Cinema News

கடந்த 10 நாள்களாக ஹைதராபாத்தில் உள்ள படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அந்த படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஒரு சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ரஜினியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில். 

அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. ரத்த அழுத்த மாறுபாட்டைத் தவிர ரஜினிகாந்துக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. சோர்வு காரணமாக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்படுவார். ரத்த அழுத்தம் சரியானதும் மருத்துவமனயிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version