இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக பயணம் தொடங்கினார். தொடர்ந்து கமல், விக்ரம், அர்ஜுன், ரஜினி, என முன்னணி நடிகர்களை வைத்து பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வெளியான படம் ‘சிவாஜி’. ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கைப்போடு போட்டு பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் ரஜினியின் எவர்க்ரீன் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.
‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என பட்டையை கிளப்பியிருப்பார். ‘சிவாஜி’ திரைப்படம் ஏ.வி.எம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது மேலும் குறிப்பிடதக்கது.
ஏ.வி.எம். புரொடக்ஷன் இதை கொண்டாடும் வகையில் சமூக வலைதளப்பக்கத்தில் ‘சிவாஜி’ திரைப்படத்தின் போஸ்டர்களையும் மேக்கிங் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறது. ரஜினி ரசிகர்கள் இந்த செய்தி கொண்டாடி வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரை உலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.