பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான மனோபாலா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் பார்வையிட்டார். மனோ பாலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: தளபதி 67 டீசர் வெளியீடு ஒத்திவைப்பு – லோகேஷ் கனகராஜ் முக்கிய அப்டேட் வெளியிட்டார்
இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தயாரிப்பாளர், இயக்குனர், நகைச்சுவை நடிகராக திரைத்துறையில் சிறந்து விளங்கினார் மனோபாலா. சிவாஜி கணேசனின் ‘பாரம்பரியம்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஊர்காவலன்’, சத்யராஜின் ‘மல்லுவெட்டி மைனர்’, விஜயகாந்தின் ‘என் புருஷன் எனக்கு மாட்டும்தான்’, என 40க்கும் மேற்பட்ட படங்களை மனோபாலா இயக்கியுள்ளார். எச்.வினோத்தின் ‘சதுரங்க வேட்டை’ மற்றும் கீர்த்தி சுரேஷ்-பாபி சிம்ஹா நடித்த ‘பாம்பு சட்டை’ போன்ற படங்களையும் மனோபாலா தயாரித்துள்ளார்.
இருப்பினும், இளைய தலைமுறையினருக்கு மனோபாலா ‘கலகலப்பு’, ‘தமிழ்ப் படம் 1 & 2’, ‘அரண்மனை 2’ மற்றும் பல வெற்றிப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து சிறப்பாகப் பெயர் பெற்றவர். இவர் சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த தெலுங்கு பிளாக்பஸ்டர் படமான ‘வால்டர் வீரையா’ படத்தில் நடித்தார். தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.