Home Cinema News Pathu Thala first single: சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது...

Pathu Thala first single: சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா?

0

Pathu Thala: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அப்பா டி. ஆர் ராஜேந்திரன் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சிம்பு. அதன் பின் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து திரையுலகில் தனது மார்கெட்டில் உச்சம் தொட்டார். அதன் பின் உடல் எடை கூடி சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். பிறகு தனது உடல் எடையை குறைத்து பின் மீண்டும் திரைத்துறையில் ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு என்று அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.

Also Read: தளபதி 67 டீசர் வெளியீடு ஒத்திவைப்பு – லோகேஷ் கனகராஜ் முக்கிய அப்டேட் வெளியிட்டார்

தற்போது சிம்புவின் அடுத்த படமான பத்து தலை படம் மார்ச் 30-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே, ஜோ மல்லூரி, கவுதம் மேனன், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தில் கேங்ஸ்டராக சிம்பு நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

Pathu Thala first single: சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா?

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொடங்கி க்ளிம்ப்ஸ் டீஸர் வரை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இப்போது லேட்டஸ்ட் தகவல் என்ன வென்றால் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளில் பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் பாடலை ஏ. ஆர் ரகுமான் பாடியதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version