Home Entertainment ரூ. 26 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்கள்: பிரபல தொழில் அதிபர்கள் மீது நடிகை சினேகா புகார்

ரூ. 26 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்கள்: பிரபல தொழில் அதிபர்கள் மீது நடிகை சினேகா புகார்

0

படங்கள், விளம்பர படங்கள் மூலம் நடித்து அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை பிற இடங்களில் முதலீடு செய்து வருகிறார் சினேகா. 

ரூ. 26 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்கள்: பிரபல தொழில் அதிபர்கள் மீது நடிகை சினேகா புகார்

இந்த நிலையில் அதிக வட்டி தருவதாக கூறி தன்னிடம் ரூ.26 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக தனியார் நிறுவனம் மீது கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் சினேகா கூறியிருப்பதாவது,

கவுரி சிமெண்ட் அன்ட் மினரல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறினார்கள்.

ரூ. 26 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். அவர்களின் பேச்சை நம்பி ஆன்லைனில் ரூ. 25 லட்சமும், ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் வீடு ஒன்றில் வைத்து ரூ. 1 லட்சமும் கொடுத்தேன்.

முதலீடு செய்து ஒரு மாதம் கழித்து வட்டியை கொடுக்கவில்லை. வட்டியை கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார்கள். வட்டியையும், முதலையும் தர மறுக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version