Home Entertainment சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்தாலும் எனக்கு எந்த உதவி செய்யவில்லை: ராசாக்கண்ணுவின் மனைவி

சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்தாலும் எனக்கு எந்த உதவி செய்யவில்லை: ராசாக்கண்ணுவின் மனைவி

0

நிஜ ராசாக்கண்ணுவின் மனைவியான பார்வதி அம்மாள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகியிருக்கிறது.

சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்தாலும் எனக்கு உதவி செய்யவில்லை: ராசாக்கண்ணுவின் மனைவி

எங்கள் கதையை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அந்த படம் மூலம் சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்திருக்கிறார். ஆனால் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதுவரை எங்களை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

பார்வதி அம்மாள் யூடியூப் சேனல் அளித்த பேட்டியில் பார்வதி அம்மாள் கூறியிருப்பதாவது. 

படத்தில் போலீஸ் சித்ரவதையால் இறந்த தன் கணவர் ராசாக்கண்ணுக்கு நியாயம் கேட்டு போராடுவார் செங்கேணி. அவருக்கு வழக்கறிஞரான சூர்யா உதவி செய்வார். 

எங்கள் கதையை வைத்து சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்திருக்கிறார். ஆனால் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு வீடு வாசல் கொடுத்து, ஏதாவது உதவி செய்யுங்கள். என் பேரப் பிள்ளைகளுக்கு வேலை வாங்கிக் கொடுங்க. அதை தான் கேட்கிறோம் என்றார்.

பார்வதி அம்மாளின் மருமகன் கூறியிருப்பதாவது. 

நான் இத்தனை காலமாக சூர்யா ரசிகனாக இருந்தேன். இனி இல்லை. அவர் எங்களை பார்க்கவே இல்லை. நாங்கள் குரவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். படத்தில் இருளர் என்று காட்டி எங்களுக்கு வர வேண்டிய சலுகைகளை அவர்களுக்கு கிடைக்க வைத்திருக்கிறார் என்றார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version