குலேபகாவலி இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜாக்பாட். இப்ப்டத்தில் காமெடி கேரக்டரில் திருடியாக நடித்துள்ளதாக தெரிகிறது. ஜோதிகா படங்களுக்கு பெண்கள், குழந்தைகள் இடையே அதிக வரவேற்பு உள்ளது.
இப்படத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ஜாக்பாட் படத்திற்கு போட்டியாக வெளியாக இருந்த நயன் தாராவின் கொலையுதிர் காலம் வெளியாவில்லை.
இந்த நிலையில், ஜோதிகாவின் ஜாக்பாட் படம், காமெடி படம் என்பதால் படத்திற்கு டுவிட்டரில் தாறுமாறாக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ALSO READ Viduthalai 1 first review: வெற்றி மாறனின் விடுதலை 1 படத்தின் முதல் அதிகாரப்பூர்வ விமர்சனம்