Home Cinema News Kamal Haasan: இந்தியன்-2 படத்தில் இணையும் பிரபலம் யார் தெரியுமா?

Kamal Haasan: இந்தியன்-2 படத்தில் இணையும் பிரபலம் யார் தெரியுமா?

54
0

Kamal Haasan: விக்ரம் படத்தில் கமல் ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை பற்றின ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன்-2:

ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகிறது இந்த படத்தில் கமல் நடித்த விக்ரம் கூட்டணி இணைவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் இந்தியன். மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகள் கழித்து தயாராகி வருகிறது.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு துடங்குவதற்குள் கடந்த 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிர் இழந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தபட்டது. அப்போது நிறுத்தபட்ட படப்பிடிப்பு 2 ஆண்டுகள் ஆகியும் தொடங்கவில்லை. அதோடு இப்படம் கைவிடப்பட்டது என்று பேசப்பட்ட நிலையில் படகுழு அதை திட்டவட்டமாக மறுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவித்தனர்.

ALSO READ  AK 62: லியோ பாணியில் ஏகே 62 படத்தின் தலைப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர் அஜித் - பரபரப்பான செய்தி

Kamal Haasan: இந்தியன்-2 படத்தில் இணையும் பிரபலம் யார் தெரியுமா?

இந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்:

கமல் நடிக்கும் இந்தியன் – 2 படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா சித்தார்த் என்று மிகப்பெரிய நட்சத்திரம் படாளமே நடிக்கின்றனர். ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்.சி 15 படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தின் பணிகளை முடித்துவிட்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை துடங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை பற்றின ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. நடிக்கும் இந்த இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ  H. Vinoth next project: துணிவு படத்திற்கு பிறகு எச். வினோத் இந்த இரண்டு ஹீரோக்களில் ஒருவருடன் இணைவார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், மக்கள் செல்வன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் விக்ரம். விக்ரம் படத்தில் கமல் ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இந்தியன் 2 படத்திலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply