Vijay 68: தளபதி விஜய் தனது ஆரம்ப நாட்களில் பல தோல்விகளையும் நிராகரிப்புகளையும் கடந்து இன்று வரை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக புகழ் பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்களில் 100 கோடி ரூபாய் மற்றும் 125 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார். அவரது தற்போதைய படமான ‘லியோ’வில் கிடைக்கும் லாபத்தில் பாதியாக சம்பளமாக பெரும் பங்கைப் பெறுவார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனையில் இருந்து விஜய்யின் சம்பளம் அவரது படங்களின் பூஜை நாளன்று வசூலிக்கப்படும் என்பதால் இந்த தொகை நியாயமானது என்று வர்த்தக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அரவருக்கு அதகி மார்கெட் உள்ளது.
விஜய் நடிக்கும் அடுத்த படாமான ‘தளபதி 68’ படத்திற்க்கு அவருக்கு நூற்றி ஐம்பது கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பார் என்பது உண்மைதான். பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் இருந்தபோதிலும், இயக்குனர் வெங்கட் பிரபு படத்தை இயக்குவார் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் என்று கூறிவருகின்றனர்.