Raavana Kottam: நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான ராவண கோட்டம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் நடித்த பிரபு தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினார். இந்த ராவண கோட்டம் திரைப்படம் சாதி கலவரத்தை தூண்டும் என்று நடிகர் சங்கம் படத்திற்கு சில கட்டுபாடுகள் விதித்தனர். அனால் படத்தை முழுமையாக பார்த்தவர்கள்தங்களது பாராட்டுகளை தெரிவித்து.
இப்படத்தின் முக்கிய கதாநாயகனாக சாந்தனு தனது சமூக வலைதளங்களில் ஒரு முக்கிய நற்செய்தியை பகிந்து கொண்டார், புகழ்பெற்ற கிரவுன் பாயின்ட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அவர்களை வாழ்த்தினார். “உன் தொப்பியில் இன்னொரு இறகு, விக்ரம் சுகுமாரன்!” என்று கூறி ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.
சிகாகோவில் இந்த திரைப்பட விழா நடந்தது, படமும் இதனால் உலகமுழுவதும் பிரபலமானது. கிரவுன் பாயின்ட் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றி பெற்றது தனகு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சாந்தனு தெரிவித்துள்ளார்.