Home Cinema News CBFC: CBFCயின் புதிய விதிமுறைகள் – திரைப்படங்கள் வயதுக்கு ஏற்ப ஐந்து வகைகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது.

CBFC: CBFCயின் புதிய விதிமுறைகள் – திரைப்படங்கள் வயதுக்கு ஏற்ப ஐந்து வகைகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது.

0

CBFC: திரைப்படத் துறையில் தணிக்கை என்பது இன்றியமையாதது. அந்தந்த தணிக்கை வாரியங்கள் அந்தந்த வயதினருக்கு ஏற்ற உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. தற்போது, ​​இந்தியாவில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழின் பணியகம் (CBFC) திரைப்படங்களை மூன்று பிரிவுகளின் கீழ் மதிபீட்டிருந்தது பொதுவாக U, U/A மற்றும் A போன்ற சான்றிதல்கள் மட்டுமே இருந்தது.

‘யு’ சான்றிதழைப் பெற்ற திரைப்படத்தை எந்த வயதினரும் எந்தத் தடையுமின்றிப் பார்க்க முடியும் என்றாலும், ‘யு/ஏ’சான்றிதல் பெற்ற படங்களை அனைவரும் பார்க்கலாம், ஆனால் குழந்தைகள் அந்தப் படங்களை பெற்றோரின் வழிகாட்டுதலுடன் பார்க்க வேண்டும். CBFC ஆல் ‘A’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் (பெரியவர்கள்) மட்டுமே பார்க்க வேண்டும்.

CBFC: CBFCயின் புதிய விதிமுறைகள் - திரைப்படங்கள் வயதுக்கு ஏற்ப ஐந்து வகைகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது.

இப்போது, ​​ஒளிப்பதிவு திருத்த மசோதா, 2023ல் அறிமுகப்படுத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கோரிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இனிமேல், திரைப்படங்கள் வயதுக்கு ஏற்ப ஐந்து வகைகளின் கீழ் மதிப்பிடப்படும். அதாவது ஐந்து புதிய வகைப்பாடுகள் என்னவென்றால் U, U/A 7+, U/A 13+, U/A 16+ மற்றும் A என்று இந்த புதிய வகைப்பாடுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன:

1) (U) யு-ரேட்டிங் பெற்ற படங்களை அனைவரும் பார்க்கலாம்.
2) U/A 7+ ரேட்டிங் பெற்ற படங்களை 7 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
3) U/A 13+ ரேட்டிங் பெற்ற படங்களை 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
4) U/A 16+ ரேட்டிங் பெற்ற படங்களை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
5) (A) ஏ தரமதிப்பீடு பெற்ற திரைப்படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
என்று ஐந்து புதிய வைகைபடுகளின் கீழ் மதிபீட்டுள்ளனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version