Home Cinema News இந்திய சினிமா வரலாற்றில் மாரி 2 சாதனை

இந்திய சினிமா வரலாற்றில் மாரி 2 சாதனை

0
கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இப்படத்தை இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடித்துள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்தில்,டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவாவின் பயிற்சியில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து பாடிய ரௌடி பேபி பாடல் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 600 மில்லியன் பேர் இந்தப் பாடலை யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். இதன் காரணமாக, ரௌடி பேபி (#Rowdy Baby) என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இந்திய சினிமா வரலாற்றில் மாரி 2 சாதனை

இப்பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும், 41 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வையாளர்களையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்திருந்தது. மேலும், வெளியாகி 157 நாட்கள் ஆன நிலையில், யூடியூப்பில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து புதிய வரலாற்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது 600 மில்லியன் பார்வகையாளர்களை கடந்து இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் பாடலும்செய்யாத சாதனையை மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11.127122578.6568942

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version