Home Cinema News Rajinikanth: ரஜினியின் அடுத்த படத்தை இயக்க போவது யார்? அறிவிப்பு விரைவில்

Rajinikanth: ரஜினியின் அடுத்த படத்தை இயக்க போவது யார்? அறிவிப்பு விரைவில்

0

Rajinikanth: தற்போது பால பிரபல இயக்குனர்கள் ரஜினிகந்தை சந்தித்து கதை சொல்லி வருகிறார்கள். அந்த பட்டியலில் நெல்சன் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 

Rajinikanth: ரஜினியின் அடுத்த படத்தை இயக்க போவது யார்? அறிவிப்பு விரைவில்

ரஜினிகாந் வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் அந்த இடத்தை நிரப்ப வேறு யாராலும் முடியாது என்பது ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினரின் பொதுவான கருத்து. எனவே சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது. ரஜினிகாந்த் அடுத்த படத்தில் தான் யார் என்று நிரூபிக்கும் கட்டாயத்தில் நீக்கிறார்.

தற்போது சமீபத்தில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தனுஷிற்கும் விவாகரத்து ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த செய்தி ரஜினி புகழ் பாதித்துள்ளதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். அதை கவலை போக்கும் வகையில் தற்போது செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில் தற்போது சில முன்னணி இயக்குனர்கள் ரஜினிகந்தை சந்தித்து கதை சொல்லி இருக்கின்றனர். பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் மாநாடு என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவும் ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியும் ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறாராம். இந்நிலையில் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் பீஸ்ட் படத்தை இயக்கிவரும் நெல்சன் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் நகடிக்கும் பீஸிட் பாடத்தை இயக்கிக்கொண்டிருக்கின்றார் நெல்சன். பீஸிட் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்சன் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தற்போது நிலையில் ரஜினிகாந்த் ஒரு இயக்குனரை தேர்ந்தெடுத்து அடுத்தப்படத்தை பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version