Leo Box Office Day 21: தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிய ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.600 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் திரையரங்குகளில் மூன்று வாரங்களை நிறைவு செய்துள்ளது, இப்போது தீபாவளி வெளியீடு படங்களில் இருந்து புதிய போட்டியை எதிர்கொள்ள தயாராக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டில் ரூ.600 கோடி மைல்கல்லை எட்டும் இரண்டாவது படம் ‘லியோ’.
Also Read: கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் புதிய அப்டேட்
நவம்பர் 8 ஆம் தேதி ‘லியோ’ இந்தியாவில் சுமார் ரூ.1.55 கோடி ரூபாய் வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்திய 21 நாள் மொத்த பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரூ 335.75 கோடியாக உள்ளது.
லியோ இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (Leo 21st Day Box Office Collection Worldwide)
- இந்தியாவிள் 21-வது நாள் ரூ.1.55 கோடி வசூல் செய்தது.
- இந்தியாவின் மொத்தம் ரூ.335.75 கோடி வசூல் செய்தது.
லியோ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் Leo 21st Day Box Office Collection Worldwide
- லியோ உலகம் முழுவதும் மொத்தம் ரூ.572.25 கோடி வசூலித்துள்ளது.
இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்த ‘லியோ’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.