Leo Box Office Day 14: தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் 2023ல் கோலிவுட்டின் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படமாகும். இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியை நோக்கி முன்னேறி இன்னும் நல்ல வசூல் செய்து வருகிறது. நவம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் படம் இரண்டு வாரங்களை நிறைவு செய்தது மற்றும் வசூலில் சிறிது சரிவைக் கண்டது. வர்த்தக அறிக்கையின்படி, ‘லியோ’ இரண்டு வாரங்களில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ரூ.3.14 கோடி வசூலித்தது. வர்த்தக மதிப்பீடுகளின்படி, ‘லியோ’ நவம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் சுமார் 3.50 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 14 நாள் மொத்த வசூல் இப்போது உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ 315.50 கோடியாக உள்ளது.
லியோ இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- இந்தியாவிள் 14-வது நாள் ரூ.3.50 கோடி வசூல் செய்தது.
- இந்தியாவின் மொத்தம் ரூ.315.50 கோடி வசூல் செய்தது.
லியோ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- உலாம் முழுவதும் 14-வது நாள் ரூ.5.50 கோடி வசூல் செய்தது.
- லியோ உலகம் முழுவதும் மொத்தம் ரூ.551.50 கோடி வசூலித்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படம் ‘லியோ’. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்த ‘லியோ’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் தரவு பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் எங்களின் சொந்த ஆராய்ச்சியின் மூலமும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவு தோராயமாக இருக்கலாம் மற்றும் தரவின் நம்பகத்தன்மை குறித்து தமிழ் பாக்கெட் நியூஸ் எந்த பொறுப்பை ஏற்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய மேலும் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கு, எங்களுடன் இணைந்திருங்கள்.