Home Cinema News Official: ‘பொன்னியின் செல்வன் 2’க்கு முன் வெளியாகும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் – வெளியான...

Official: ‘பொன்னியின் செல்வன் 2’க்கு முன் வெளியாகும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

0

Official : மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் 2 படம் கூடியவிரைவில் திரைக்கான உள்ளது. இப்படம் வெளியவதற்க்கு முன்னரே ஜெயம் ரவி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் நாடகமான ‘அகிலன்’ மார்ச் மாதம் பெரிய திரைக்கு வருகிறது.

Official: 'பொன்னியின் செல்வன் 2'க்கு முன் வெளியாகும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் ஜெயம் ரவி இருக்கும் போஸ்டரை வெளியிட்டு அகிலன் மார்ச் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வருகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ப்ரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த அதிரடி திரில்லர் படத்தில் ஜெயம் ரவி கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

Also Read: மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து – வெளியான அதிர்ச்சிகரமான விபத்தின் வீடியோ

முன்னதாக ஜெயம் ரவியை வைத்து ‘பூலோகம்’ படத்தை இயக்கிய என் கல்யாண கிருஷ்ணன் அகிலன் படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைப்பாளராகவும், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version