Shocking: தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் ஹீரோவான விஷால், தனது படங்களுக்கு சண்டை மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக ரிஸ்க் எடுப்பவர். சமீப காலங்களில் அவர் ஸ்டண்ட் செய்யும் போது பல முறை காயம் அடைந்தார், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. தற்போது விஷால் நடித்து கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இன்று அதிகாலை ஒரு ஸ்டுடியோவில் விஷாலின் புதிய திரைப்படமான ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, படபிடிபிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிரக் ஒன்று நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டதில் கட்டுப்பாட்டை இழந்து ஒரு சுவர் வழியாக மோதி கேமராவை நோக்கி வர வேண்டும் என்பது போல் காட்சி அமைக்கபட்டிருந்தது, ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிரைவரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, அது வேகமாகச் சென்று மற்றொரு சுவரிலும் மோதி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. நடிகர் விஷால் விபத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், வீடியோவில், தானும் எஸ்ஜே சூர்யாவும் காட்சியில் நடித்த இடத்தைக் குறிக்கிறது. இருவரும் நடுரோட்டில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினர். “சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் என் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன் என்று எஸ் ஜே சூரியா கூறியதை விஷால் பகிறந்தார்.
https://twitter.com/Harish_NS149/status/1628317383101218816?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1628317383101218816%7Ctwgr%5E563bf377d87ed7208933c3aac23656397d79539f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fvishal-mark-antony-movie-accident-footage-video-s-j-suryah-adhik-ravichandran–news-333231
‘மார்க் ஆண்டனி’ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை நோக்கி டிரக் வேகமாகச் சென்றதால், அவர்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பை நோக்கி ஓடுகிறார்கள், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘மார்க் ஆண்டனி’ படத்தின் கதை பல காலகட்டங்களில் நடப்பதாக கூறப்படுகிறது. முக்கிய நட்சத்திரமாக விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, அபிநயா, சுனில் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த ஆண்டு 2023 கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.