Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

குலேபகாவலி இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜாக்பாட். இப்ப்டத்தில் காமெடி கேரக்டரில் திருடியாக நடித்துள்ளதாக தெரிகிறது. ஜோதிகா படங்களுக்கு பெண்கள், குழந்தைகள் இடையே அதிக வரவேற்பு உள்ளது.இப்படத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ஜாக்பாட் படத்திற்கு போட்டியாக வெளியாக இருந்த நயன் தாராவின் கொலையுதிர் காலம் வெளியாவில்லை.இந்த நிலையில், ஜோதிகாவின் ஜாக்பாட் படம், காமெடி படம் என்பதால் படத்திற்கு டுவிட்டரில் தாறுமாறாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Read More

‘நேர்கொண்ட பார்வை’ படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி பிரம்மாண்ட ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில். நேற்று போனி கபூர் இப்படத்தை தமிழ்நாட்டில் யார் வாங்குகிறார் என்ற விவரத்தை வெளியிட்டார்.இப்போது பிரபலங்களுக்கு மட்டும் படத்தை ஸ்பெஷலாக திரையிட்டு காட்டியுள்ளார். இதில் தயாரிப்பாளர் போனி கபூர் அவரது மகன் அர்ஜுன் கபூர், அருண் விஜய், தீபக் போன்ற பல பிரபலங்கள் பார்த்துள்ளனர்.படத்தை பார்த்தவர்கள் அஜித்தின் நடிப்பை கண்டு மிரண்டு போனதாகவும், படம் செம்ம மாஸாக வந்திருப்பதாக விமர்சன செய்தி கசிந்தது.

Read More

’நேர்கோண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான ‘தல 60′ படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் என போனிகபூர் சமீபத்தில் டுவீட் ஒன்றின் மூலம் தெரிவித்தார். ‘தல 60’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் விரைவில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.இந்த படத்தில் சில பிரபலங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தின் நாயகியாக போனிகபூர்-ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதேபோல் ‘தல 60’ படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Read More

எப்போதெல்லாம் தல – தளபதி படங்கள் திரைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையில் மோதல் வந்துவிடுகிறது. அந்த வகையில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. இதே போன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.இந்த நிலையில், தான் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு டுவிட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் அஜித் படம் வெளியாக இருப்பதால் #ஆகஸ்ட்8பாடையகட்டு என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய, பதிலுக்கு #RIPActorVijay என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இதையடுத்து #LongLiveVijay என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. இதற்கு பலரும் ஆதரவு கொடுத்தனர்.சென்னை புழல் அருகில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அந்த முகாமில் அஜித் ரசிகரான உமா சங்கர் (32), விஜய் ரசிகரான ரோஷன் (34) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். உமா சங்கர் விஜய் பற்றி…

Read More

விஜய் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் சண்டைக்காட்சி ஒன்றை எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் 22 நாட்கள் கால்ஷிட் கேட்டுள்ளாராம். சண்டைக்காட்சி ஷூட்டிங் 22 நாட்கள் சென்றால், கண்டிப்பாக படம் தீபாவளிக்கு வருவதில் பெரிய சிக்கல் ஏற்படும் என கூறப்படுகின்றது.இதனால் அட்லீ, படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு கொண்டுவரவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

Read More

சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் அதிகம் அவரின் பெயரும் படமும் இடம் பெற்று விடுகிறது. மெர்சல் படத்திலிருந்து தொடங்கிய இந்த பரபரப்பு சர்கார், தற்போது பிகில் படம் வரை வந்து நிற்கிறது.அவரின் பாடல்கள் இணையதளங்களில் சில நிமிடங்களிலேயே 100K லைக்ஸ் தாண்டிவிடுகிறது. ஆனாலும் சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி பாடலின் சாதனையை நேற்று வந்த சிங்கபெண்ணே பாடல் முந்தவில்லை.இதோ அந்த பாடல்கள்.ஒரு விரல் புரட்சி – 8 நிமிடம்சிங்கபெண்னே – 9 நிமிடம்சிம்டாங்காரன் – 10 நிமிடம்

Read More

தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் ஏற்கனவே ரஜினிகாந்துக்கு ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா காட்சிகளையும் வலைத்தளத்தில் வைரலாக்கினர்.இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர்.செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி தற்போது மீண்டும் ரஜினிகாந்த் வடமாநில போலீஸ் உடையில் நடந்து வரும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.ரஜினியின் போலீஸ் தோற்றம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை வித்யாபாலன். படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.இந்த நேரத்தில் படம் குறித்தும், வித்யா பாலன் படத்தின் நாயகன் அஜித் பற்றியும் ஒரு பேட்டியில் அஜித்தின் குணத்தை கண்டு தான் வியந்துள்ளேன், அவ்வளவு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர் என் முன் மிகவும் சாதாரணமாக இருந்தார். அதைக்கண்டு நான் அதிகம் ஆச்சரியப்பட்டேன், என்று பேட்டியில் கூறினார் வித்யாபாலன்.

Read More

தமிழக இயக்குனர்கள் சங்கமும் தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்றது. அனைத்து இயக்குனர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணியும், வித்யாசாகரும் போட்டியிட்டார்கள்.இதில் ஆர்.கே. செல்வமணி 1, 386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதிவான 1, 503 வாக்குகளில் செல்வமணிக்கு 1, 386 வாக்குகள் கிடைத்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகருக்கு 100 வாக்குகள் கிடைத்தது. அவருக்கு சங்கத்தை சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Read More