Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
To understand the new politics stance and other pro nationals of recent times, we should look to Silicon Valley and the quantified movement of the latest generation. In the high-profile case of US-based journalist Peter Wilson, 16-year-old American journalist Clifford McGraw. On Monday, UK fashion designer Andy McDonald disclosed his discussion with the style icon, Theresa May, and the renowned fashion hub, Downing Street. Accused of plotting against the principles of the UK Fashion Authority’s anti-trend regulations, a claim he firmly refutes. Following this, fashion enthusiasts were granted twenty hours to inquire about the perspectives of both parties. Addressing The…
சமீபத்தில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, இன்னும் பலர் நடித்துள்ளனர். இரண்டு வாரங்களை கடந்த இப்படம் வசூல் சாதனைப்படைத்துள்ளது.விஸ்வாசம் படத்தைப் போலவே இப்படமும் 100கோடி ரூயாப் வசூல் சாதனைப்படைத்துள்ளது.இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச்.வினோத், போனிகபூர், அஜித் இவர்கள் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. மேலும் இப்படத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கார், மற்றும் பைக் பந்தையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அஜித் உடல் எடையை குறைத்த போட்டோ ஒன்று சமூக வலையதளத்தில் வைரலாகி வருகிறது.
கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு இயக்குநர் பாரதிராஜா மற்றும் திரைக்கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று 14ம் தேதி நடந்த விழாவில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது:போன மாதம் 8ம் தேதி கலைஞானம் சார் எனக்கு போன் செய்தார். அடுத்த மாதம் 14ம் தேதி எனக்குப் பிறந்தநாள். முக்கியமான பிறந்தநாள். 90வது பிறந்தநாள் என்று சொன்னார். வாழ்த்தினேன்.’அடுத்த மாதம், அதற்காக பாரதிராஜா ஒரு விழா எடுக்கிறார். நீங்கள் அவசியம் வரவேண்டும். நீங்கள் வந்து கலந்துகொண்டால்தான் விழா பூர்த்தி அடையும்’ என்று கலைஞானம் சொன்னார். ஆனால் அப்போது எனக்கு ‘தர்பார்’ ஷூட்டிங் இருக்கேன்னு சொன்னேன். பாரதிராஜா பேசுவார் உங்ககிட்ட’ன்னு சொன்னார் கலைஞானம்.அப்புறமா, பாரதிராஜா பேசினார். ‘என்ன தலைவா… எப்படி இருக்கீங்க?’ன்னு கேட்டார். நானும் அவரும் தனியா இருக்கும் போது, பாரதிராஜா என்னை தலைவான்னுதான் கூப்பிடுவார். ஆனா, என்னுடைய ரசிகர்கள் தலைவான்னு கூப்பிடுவதற்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.அதேபோல், என்னுடைய படத்தை…
‘அயோக்யா’ படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வந்த படத்துக்கு ‘ஆக்ஷன்’ இதன் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தது.சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்துள்ளனர்.பாகிஸ்தான் தீவிரவாதத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதையை சுந்தர்.சி உருவாக்கியுள்ளார். அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் தான் துருக்கியில் காட்சிப்படுத்தியுள்ளார்.
கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு, இயக்குநர் பாரதிராஜா சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: கலைஞானத்துக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில் இருக்கிறார் என்று இப்போதுதான் தெரியும். அந்த வேலையை அரசாங்கத்துக்கு தரமாட்டேன். நானே அவருக்கு சொந்தவீடு வாங்கித் தருகிறேன் என்று ரஜினிகாந்த் பேசினார்.சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் கலைஞானம்தான் முக்கியமான ஆள். அவருடைய கதையில் ‘ஆறுபுஷ்பங்கள்’ படத்தில் நான் நடித்தேன். அப்போதிருந்தே என்னை அவருக்கு ரொம்பவே பிடிக்கும்.பிறகு ஒருநாள் என்னைப் பார்க்க வேண்டும் என்று வந்தார் கலைஞானம். ‘நான் ஒரு படம் தயாரிக்கிறேன். கதை சொல்றேன். பிடிச்சிருந்தா நடிங்க’ன்னு சொன்னார். எனக்கு கதை பிடிச்சிருந்தது.‘நீதான் ஹீரோ’ன்னார் கலைஞானம். சத்தியமா சொல்றேன். கண்டக்டரா இருந்தேன். நடிக்க வந்தேன். ஒரு வீடு, கையில கொஞ்சம் பணம் இதெல்லாம் இருந்தாலே போதும்னு நினைச்சேன். ஹீரோவாகணும்னு சத்தியமா ஆசைப்படவே இல்லை. வில்லனாகவே நடித்துக் கொண்டே இருப்போம் என்றுதான்…
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’.போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியானது. நேர்கொண்ட பார்வை’ பார்த்துவிட்டு, அதில் நடித்த அஜித்துக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகமுழுவதும் மொத்த வசூல் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12) இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அஜித் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இருவருக்கும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி. ரொம்ப நல்ல படம். சரியாக ரீமேக் பண்ணியிருக்கீங்க. hats off’ என்று ரஜினி தெரிவித்ததாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். ரஜினியின் பாராட்டால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இப்படத்தை இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.இப்படத்தில்,டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவாவின் பயிற்சியில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து பாடிய ரௌடி பேபி பாடல் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 600 மில்லியன் பேர் இந்தப் பாடலை யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். இதன் காரணமாக, ரௌடி பேபி (#Rowdy Baby) என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.இப்பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும், 41 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வையாளர்களையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்திருந்தது. மேலும், வெளியாகி 157 நாட்கள் ஆன நிலையில், யூடியூப்பில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து புதிய வரலாற்று சாதனை…
சிங்கப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிட்டுள்ளார். படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 8 என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கான முன்பதிவு தொடங்கி பல அரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படங்களின் பிரத்யேகக் காட்சி திரையிடல் என்பது வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னரோ அல்லது வெளியீடு அன்றோ இருப்பது வழக்கம். ஆனால் சமீப காலங்களில் முதல் முறையாக, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நடைபெறுகிறது. சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 6) காலை 9 மணிக்குத் துவங்கும் இந்த திரையிடலில் பங்கேற்க படத்தில் நடித்திருக்கும் வித்யா பாலன், ஷ்ரத்தா ஆகியோர் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.இந்தத் திரையிடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், எனது மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார், ஹெச் வினோத், ஒட்டுமொத்த நடிகர்கள், தொழில்நுட்பக்…
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுஷ்மிதா சென். இவர் 1994ஆம் ஆண்டு ”மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் பெற்றவர். இவர் தமிழ் சினிமாவில் “ரட்சகன்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை அடுத்து ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். இவர் தற்போது நாகர்ஜூனாவின் “ரக்ஷகாடு” என்ற தெலுங்கு படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கிறார். 40 வயதாகும் சுஷ்மிதா சென், தற்போது தன்னை விட 14 வயது குறைந்த ரோஹ்மன் ஷாவால் என்ற இளைஞரோடு லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்போது அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக, பாலிவுட்டி வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், தன்னை விட வயதில் மிகவும் குறைந்தவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் முடித்தார். பிரபலங்கள் தன்னைவிட வயது…
அஜித் வித்யா பாலன் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. பாலிவுட்டில் பிரபலமான போனி கபூர், “நேர்கொண்ட பார்வை” படத்தை தயாரித்துள்ளார். வரும் 8ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் என பன்முகங்கள் கொண்ட உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டரில் “நேர்கொண்ட பார்வை” படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னை, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

