Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Rajinikanth: இளைஞர்கள் அனைவரும் கட்டயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்திலும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக தமிழில் வெளியாகும் மற்ற நடிகர்களின் புது படங்களை பார்த்து பாராட்டி வருகிறார். அந்த வகையில் கமல் நடித்த விக்ரம் படம், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன், ரன்வீர் சிங் நடித்த 83 போன்ற பல படங்களை பாராட்டியுள்ளார். தற்போது மாதவன் மற்றும் சிம்ரன் நடித்த ராக்கெட்ரி என்னும் படத்தை பாராட்டியதோடு இளைஞர்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளர். 1994இல் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் பாகிஸ்தானுக்கு விஞ்ஞான ரகசியங்கள் கூறியதாக கைது செய்யப்பட்டார். பின் 1998 ஆம் ஆண்டு நிரபராதி என்று சுப்ரிம் கோர்டால் விடுதலை செய்யப்பட்டார். மறைந்த ஏபி.ஜே அப்துல் கலாம் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.…
Dhanush: தனுஷ் தன் பன்முகத்திறனால் உலக ரசிகர்களை ஈர்த்து இன்று உலகளவில் பாராட்டக்கூடிய நடிகராக திகழ்கின்றார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் சிறந்து திறமை கொண்ட தனுஷ். பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் அசத்தி வருகின்றார். மேலும் அசுரன் மற்றும் ஆடுகளம் படத்தில் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருமுறை வென்றுள்ளார் தனுஷ். இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் நடித்த சில திரைப்படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனவே தற்போது தனுஷ் ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறார். தனுஷ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்த மாறன், ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே ஆகிய படங்கள் திரையில் வெளியாகாமல் OTT யில் வெளியானது. மேலும் இப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக மாறன் திரைப்படம் படுதோல்வி அடைந்து சமூகத்தளங்களின் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் தனுஷின் படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாகுவது மட்டுமல்லாமல்…
Suriya: தற்போது அவரது படங்கள் தொடர்ந்து வெற்றியை பெறாத நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படம் அவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். என்னதான் சூரரை போற்று படம் OTT யில் வெளியானாலும் இப்படம் ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்றது. அதைத்தொடர்ந்து வெளியான ஜெய் பீம் தமிழ் சினிமா மட்டுமல்லா தமிழ் அரசியல் வட்டாரங்களிலும் சர்ச்சை ஏற்படாதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் சூர்யாவிற்கு வெற்றி படமாக அமைந்தது. Also Read: ஆழ்வார் பேட்டை கமல்ஹாசன் வீட்டுக்கு வந்த நோட்டீஸ் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் நடித்து வருகின்றார். சூர்யா மற்றும் பாலா 18 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவுள்ளது. இதையடுத்து…
Health Tips: பயணத்தின் போது தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் – சாப்பிட வேண்டிய உணவுகள். பயணம் செய்வது ஒரு சாகசப் பயிற்சியாகும். இருப்பினும், பயணத்தின் போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அடிக்கடி பயணம் செய்பவர்கள் அனைவரும் வெளியில் சாப்பிடுவது ஒரு சிறந்த அனுபவம் என்பதை நன்கு அறிவார்கள். பெரும்பாலான பயணிகள் தங்கள் சுவை மொட்டுகளை தனித்தனியான சுவைகளுக்கு விருந்தளிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். பயணத்தின் போது, லேசாக சாப்பிடுவது நல்லது. பயணத்தின் போது எளிதில் தயாரிக்கக்கூடிய மற்றும் வயிற்றில் எளிதாக இருக்கும் எந்த உணவுப் பொருளையும் விரும்ப வேண்டும். சரியான சுகாதாரம் இல்லாத இடங்களில் குழாய் நீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும். நீரூற்று பானங்களைத் தவிர்க்க முயற்சிக்கவும். மக்கள் வெளியே செல்வதற்கு முன் தங்கள் முழு பயணத்தையும் திட்டமிட விரும்புகிறார்கள். இதில் மிக முக்கியமான ஒன்று, எந்த நேரத்தில் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதுதான். அதனால் நீங்கள் நோய்வாய்ப்படாமல் பயணத்தை…
Kamal Haasan: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாஸன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து. தற்போது அந்த ராஜ் கமல் பிம்ஸ் நிறுவனம் இருக்கும் இடத்திற்கு புது சோதனை வந்தது என்றே தான் சொல்ல வேண்டும். ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் நடிகர் கமலுக்கு சொந்தமான வீடு உள்ளது. அது தற்போது அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்னும் அலுவலகமாக இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் விஜயகாந்த் கல்யாண மண்டபம் லேண்ட் மார்காக இருந்தது அது சில மேம்பால பணிகளுக்காக இடிக்கபட்டது. தற்போது அது தேமுதிக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. அதுபோன்று தற்போது மெட்ரோ ரெயில் பணிகளுக்காக கமலின் ஆழ்வார் பேட்டை வீட்டில் 170…
Vignesh Shivan: சிம்பு நடித்த போடா போடி, விண்ணைத் தாண்டி வருவாயா படங்களால் மூலம் தான் சிம்பு ஒரு ஸ்டார் ஆனார். இரண்டுமே என்னுடைய கதைகள் தான் என்று ஸ்ரீநிதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். போடா போடி படம் மூலம் இயக்குநர் அறிமுகமான விக்னேஷ் சிவன். இந்த படத்தில் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்து கடந்த 2012ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. யாருய்யா இந்த விக்னேஷ் சிவன், முதல் படத்திலேயே அசத்தியிருக்கிறாரே என்றார்கள். அதன் பிறகு தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் டிவி நடிகை ஸ்ரீநிதி போடா போடி படம் தன்னுடைய கதை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் ஸ்ரீநிதி கூறியதாவது, செக்கச் சிவந்த வானம் என் கதை இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயா,…
Suriya: உலக சினிமாவில் உயரிய மதிப்புமிக்க விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். இந்த விருதுகளை கொடுக்கும் தேர்வு குழுவில் உலகம் முழுவதும் உள்ள 4000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆஸ்கர் விருதுகான படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் இவர்கள் தங்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்ய முடியும். இந்த சிறப்புக்குரிய ஆஸ்கர் விருது தேர்வுகுழுவில் கோலிவுட் நடிகரான சூரியா இந்த குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு குழுவில் இணைய அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த ஆஸ்கர் விருது குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த நடிகரும் இல்லை. அண்மையில் சூர்யா நடித்து தயாரித்த ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு கொண்டுசெல்லபட்டது. ஆனால் பரிந்துரை செய்யப்படாததால் விருது கைநழுவி போனது இந்த சூழலில் ஆஸ்கர் விருதைப் கைவிட்ட சூர்யா, ஆஸ்கர் விருது தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராகி தற்போது அனைவரையும் திரும்பி பார்கவைத்துள்ளர் சூர்யா. ஆஸ்கர் விருது தேர்வு…
பிரபல நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மென்பொறியாளரான வித்யாசாகர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர்கள் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் 48 வயதான வித்யாசாகர், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மட்டுமின்றி, இவரது மகள் நைனிகா மற்றும் தாய் ராஜ் மல்லிகா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நுரையீரல் பிரச்சனையால் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வித்யாசாகரின் சுவாச பிரச்சனை மோசமடைந்ததால் உயர் சிகிச்சைகாக அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில்…
Dhanush: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘சாணி காகிதம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானார். இவர் தளபதி விஜயின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி சமீபகாலமாக இவர் இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் கட்டிவருகிறார். தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் தன்னுடைய தம்பி தனுசை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நானே வருவேன் படத்தில் நடித்திருக்கும் இரட்டை வேடத்தில் போஸ்டர்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். தயார் நிலையில் உள்ள இந்தப் படத்தை செல்வராகவன் முக்கியமானவர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். அதை பார்த்தவர்கள் மிரண்டு போயிருக்கின்றனர். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் செல்வராகவன் பிரமாதமாக இயக்கி இருப்பதாக உற்சாகத்துடன் தங்கள் கருத்தை…
Rajamouli: இயக்குனர் ராஜமௌலி தனது படைப்புகளின் மூலம் வசூலை குவித்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு வசூல் வேட்டை ஆடினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் வேட்டை 1000 கோடியை தாண்டியது. மீண்டும் அதே கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே RRR கூட்டணியில் இன்னொரு படத்தை இயக்க ராஜமௌலியிடம் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று கேட்டுள்ளது. ராஜமௌலியும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனால் இப்படம் மிக விரைவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். காடுகளை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும்…

