Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Vijay: நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நிலையில், தற்போது விஜய் அடுத்த படமான ‘தளபதி 67’ என தற்காலிகமாக குறிப்பிடப்படும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். Also Read: லெஸ்பியன் காதலை மையமாகக் கொண்ட மலையாளப் படம் ஹோலி வூண்ட் OTT ரிலீஸ் தேதி தற்போது விஜய்யின் அடுத்த படம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. மேலும் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தை இயக்க கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட இந்நிலையில் தற்போது படத்தின் சமீபத்திய செய்தி நடிகை த்ரிஷா ‘தளபதி 67’ படத்தில் இணைவதாக செய்தி வந்துள்ளது. நடிகை சமந்தா தான் முன்னணி நாயகியாக நடிக்க இருப்பதாக முன்பே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.…
Holy Wound: பிக் பாஸ் போட்டியாளர் ஜானகி சுதீர் மற்றும் அமிர்தா வினோத் நடித்துள்ள ‘ஹோலி வூண்ட் ஆகஸ்ட் 12 ஆம் தேதி OTT தளமான SS Frames இல் வெளியாக உள்ளது. அசோக் ஆர் நாத் இயக்கிய இப்படம் ஏற்கனவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. Also Read: தனுஷுக்கு கதை தேடும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் டிரெய்லரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். படம் ஒரு லெஸ்பியன் உறவை வெளிப்படுத்தும் துணிச்சலான முயற்சி. இரண்டு பெண்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் உறவை மீண்டும் புதுப்பிக்கிறார்கள். இருவரும் சிறுவயதில் இருந்தே காதலித்து வந்தனர், ஆனால் தனித்தனியாக செல்ல வேண்டியிருந்தது. ஒருவர் கன்னியாஸ்திரி, மற்றவர் இல்லத்தரசி. இந்தப் படம் கடந்த சில மாதங்களாக பல்வேறு தடைகளை சந்தித்து வருகிறது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு சபையைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி அங்குள்ள உயர்…
Cobra: பிரபல நடிகர் சீயான் விக்ரமின் அடுத்ததாக வரவிருக்கும் திரைப்படத்தின் வெளியீடு தேதி குறித்து மீண்டும் செய்தி பரவி வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Also Read: தனுஷுக்கு கதை தேடும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் Cobra Release Date படம் ஆகஸ்ட் 31, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்பது கிசுகிசு தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம். இந்நிலையில் தற்போது சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ரீ-ரிக்கார்டிங் பணிகளை தொடங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விக்ரமின் ஜோடியாக கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் மிருணாளினி ரவி, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில்…
Tollywood: ஒருவரை பான் இந்தியா நடிகர் என்று அழைக்க வேண்டும் என்றால், நிச்சயமாக அவர் நாட்டின் அனைத்து பிரபலமான மொழிகளில் படங்கள் நடித்து இருக்க வேண்டும். ஒரு பக்கம் தமிழ் படம், இன்னொரு பக்கம் தெலுங்கில் சார் (வாத்தி) படத்தில் அறிமுகம், இன்னொரு பக்கம் பாலிவுட், ஹாலிவுட் படங்கள் என நடித்து வருகிறார். சூப்பர் திறமை கொண்ட ரியல் பான் இந்தியா ஸ்டார் தனுஷ் தற்போது அத்தனை மொழிலும் பிஸியாக நடித்து வருகிறார். Also Read: நான்காவது முறையாக தாத்தாவாகும் ரஜினிகாந்த் தனுஷின் முதல் தெலுங்கில் அறிமுகமான ‘சார்’ (வாத்தி) கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அவர் தனது இரண்டாவது நேரடி தெலுங்கு படத்திற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸிடமிருந்தும் முன்பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனுஷுக்கான சரியான கதை அமையாததால் தற்போது திறமையான ஹீரோவுக்கான கதை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறதாம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், கதைக்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு…
Vijay: தளபதி விஜய் தற்போது பைடிப்பள்ளி வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிக்கா மந்தனா நடிக்கிறார். வாரிசு படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் குடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைய இருக்கிறார் விஜய். ரசிகர்களுக்கும் இவர்களின் இருவரின் காம்போவில் உருவாகும் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. Also Read: நான்காவது முறையாக தாத்தாவாகும் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, இரும்பு கை மாயாவி என்று நான்கு படங்கள் இருக்கிறது. தளபதி 67 படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாக இருக்கிறதாம். மும்பை தாதாவாக விஜய் இப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். தற்போது வாரிசு படத்தின் பபிடிப்பில் பிஸியாக நடித்து வரும் விஜய்…
Aditi Shankar: உண்மையான திறமைக்கு பதிலாக நட்சத்திரக் குழந்தைகளையும் ஊக்குவிப்பதற்காக பாலிவுட் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவும் வேறு பட இல்லை. கார்த்தியின் விருமன் படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது, அதில் அதிதி ஷங்கர் தனது முதல் பொது தோற்றத்தில் தோன்றினார். Also Read: நான்காவது முறையாக தாத்தாவாகும் ரஜினிகாந்த் இந்நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் அவரது தோற்றம் மற்றும் திறமை குறித்து இடைவிடாத ட்ரோலிங் நடந்து வருகிறது. இவ்வளவு பெரிய படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு தோற்றமும் இல்லை, உருவமும் இல்லை என்று மக்கள் விமர்சிக்கிறார்கள். திறமையான தந்தையால், அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. திரையுலகில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நெட்டிசன்கள் மட்டுமின்றி, சில நடிகைகளும் கூட தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி ட்வீட்…
Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த நான்கு தசாப்தங்களாக தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோ வாக இருக்கிறார். 71 ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் இளம் ஹீரோக்களுக்கு இணையாக நடித்து வருகிறார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார். Also Read: மீண்டும் இணையும் அஜித்-விஜய் – இவர்தான் இயக்குனர் லதா ரஜினிகாந்தை கடந்த 41 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ரஜினிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா, தனுஷுடன் 2004 இல் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர், ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஜோடி பிரிந்ததாக அறிவித்தது. சௌந்தர்யா ரஜினிகாந்த் 2010 இல் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு வேத் என்ற மகன்…
Viral News: கோலிவுட் சினிமாவில் இரண்டு முக்கிய தூண்களாக இருப்பவர்கள் அஜித்-விஜய். உச்ச நட்சத்திரங்களாக இருவரும் தங்களின் திரைப்படங்களின் மூலம் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை அள்ளி குவிப்பவர்கள். அஜித்-விஜய் இருவரும் தமிழகம் முழுவதும் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் இருவரின் திரைப்படங்கள் ஒன்றாக ஒரே நாளில் வெளியாவதே கஷ்டம். இந்த நிலையில் தற்போது விஜய்-அஜித் இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது விஜய்-அஜித் என இரு நடிகர்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு இயக்குநர் வெங்கட் பிரபு. Also Read: கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் இந்நிலையில் இவர் விஜய்-அஜித் இருவருக்கும் வைத்துள்ள கதை உண்மைதானாம். தற்போது அந்த கதை மெருகேற்றும் வேலை இரண்டு பிரபல இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாதாம். அஜித் இந்த கதை கேட்டு ஒகே கூறியுள்ளதாகவும், விஜய்க்கு இந்த விஷயம் தெரியபடுத்தப்பட்டு கதையை…
Gautham Karthik: சில மாதங்களுக்கு முன்பு கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், கௌதம் கார்த்திக்குடனான காதலை மறுத்த மஞ்சிமா, திருமணம் போன்ற பெரிய நிகழ்வை யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் கௌதம் தனது திருமணத் திட்டத்தை வெளியிட்டார். Also Read: திருச்சிற்றம்பலம் டிரைலர் வெளியீட்டு தேதி தற்போது சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாத்து தலை’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடியபோது, தனது திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார், “மிகவும் விரைவில் என்றார் புன்னகையுடன். கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் தங்கள் உறவைப் பற்றி அந்தந்த பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்ணாமை தகவல் வரும் வரை காத்திருப்போம். ‘தேவராட்டம்’ படத்தில் மஞ்சிமா மோகனுடன் கௌதம்…
Dhanush: நடிகர் தனுஷின் வரவிருக்கும் திரைப்படமான திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18, 2022 அன்று திரையரங்குகளில் திரையிடத் தயாராக உள்ளது மற்றும் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 7, 2022 அன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் இப்போது அறிவித்துள்ளனர். Also Read: டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் ஷங்கர் – வைரலாகும் புகைபடங்க https://twitter.com/sunpictures/status/1555554204475076609?s=21&t=68MLI7HeIid1_7P4Kchj5Q சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. Also Read: Suriya: ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

