Home Uncategorized Maamanan: ‘மாமன்னன்’ முதல் சிங்கிள் – ஏ.ஆர் ரகுமான் இசையில் வடிவேலுவின் அற்புதமான குரலில் வெளியாகியுள்ளது

Maamanan: ‘மாமன்னன்’ முதல் சிங்கிள் – ஏ.ஆர் ரகுமான் இசையில் வடிவேலுவின் அற்புதமான குரலில் வெளியாகியுள்ளது

193
0

Maamanan:  மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த இசையமைப்பை யுகபாரதியின் வரிகளுடன் வைகை புயல் வடிவேலு பாடியுள்ளார். ‘இராச கண்ணு’ ஒரு குலத்தின் அவலத்தைப் பற்றிய துக்கப் பாடலாக ஒலிக்கிறது. வடிவேலுவின் குரலிற்கு ஏற்ப்ப இசையை பயன்படுத்தி பாடலை அழகாக உருவாக்கியுள்ளார் ஏ.ஆர் ரகுமான். இந்த லிரிக்கள் வீடியோவில் பாடல் பதிவின் கிளிப்புகள் மற்றும் சில மாண்டேஜ்கள் உள்ளன.

ALSO READ  Jothika: மனைவி ஜோதிகாவின் சமீபத்திய பிரமிக்க வைக்கும் வீடியோவுக்கு சூர்யாவின் ரியாக்ட்

Maamanan: 'மாமன்னன்' முதல் சிங்கிள் - ஏ.ஆர் ரகுமான் இசையில் வடிவேலுவின் அற்புதமான குரலில் வெளியாகியுள்ளது

உதயநிதி ஸ்டாலின் நடனமாடும் சில காட்சிகளுடன் வீடியோ முடிகிறது. முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முன், அவரது நடிப்பு வாழ்க்கையில் இதுவே கடைசி படம் என்று கூறப்படுகிறது. சாண்டி மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் ஜூன் மாதம், பக்ரீத் பண்டிகை அன்று திரைக்கு வர உள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பை மேற்கொண்டார்.

ALSO READ  Suriya speech about Sardar: கார்த்தியின் 'சர்தார்' ட்ரெய்லர் பார்த்து அற்புதமான வார்த்தைகள் கூறிய சூர்யா

Leave a Reply