Sivakarthikeyan தயாரிப்பில் உருவாகியுள்ள, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கிய திரைப்படம் Thai Kizhavi இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகை ராதிகா வயதான பாட்டி வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம், முதல் நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்த சிவகார்த்திகேயன், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
“மக்களோடு மக்களாக படம் பார்த்த அனுபவம்”
மதுரை மண்ணின் மைந்தர் இயக்கிய படத்தை மதுரையிலேயே பார்க்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்ததாக கூறிய சிவகார்த்திகேயன்,
“படத்தில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் ரசிகர்கள் கைதட்டி ரசித்ததை பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சி

பெண்களை மையமாகக் கொண்ட படம்
படத்தின் தலைப்பு குறித்து விளக்கமளித்த சிவகார்த்திகேயன்,
“‘தாய் கிழவி’ என்பது ஆதிகால பெண்களை குறிக்கும் சொல். ஒரு வீட்டில் பெண்கள் எவ்வளவு முக்கியம், அவர்கள் தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள் என்பதையே அந்த வார்த்தை சொல்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் பெண்கள் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்பதை இந்த படம் பேசுகிறது,” இந்த படம் ஒரு மாநிலத்துக்கான படம் அல்ல என்றும், இந்தியா முழுவதும் உள்ள பெண்களை பற்றிய கதையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
“இடையூறு யார் என்பதை சொல்ல விரும்பவில்லை”
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், “ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் உங்களுக்கு இடையூறு செய்கிறார்கள் என்று கூறுகிறீர்களே, அது யார்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “அதை நான் வெளிப்படையாக சொன்னால், சில யூடியூப் சேனல்களுக்கு வியூஸ் தான் அதிகரிக்கும். யாரையும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக நான் இதை கூறவில்லை,” என்று விளக்கினார்.
“பல தடைகளை தாண்டியே இங்கே வந்துள்ளேன்”
தொடர்ந்து அவர் கூறுகையில்,
“ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பல தடைகள் இருக்கும். நானும் பல தடைகளை தாண்டி தான் இங்கு வந்துள்ளேன். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். இனி இதுபோன்ற விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க முயற்சிப்பதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.


