Home TV Show Bigg Boss Tamil S6: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் யார்...

Bigg Boss Tamil S6: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் யார் – வெளியான எலிமினேஷன் லிஸ்ட்

126
0

Bigg Boss: அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. சுவாரஸ்யம் குறையாமல் அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். தற்போது அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் முதல்முறையாக 24 நேரமும் ஒளிபரப்படுகிறது. நல்ல டி ஆர். பி ரேடிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது போட்டி தொடங்கி ஒரு வாரம் ஆகிய நிலையில் இந்தவாரம் முதல் எலிமினேஷன் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

ALSO READ  Bigg Boss Tamil S6: ரச்சிதாவுடன் ராபர்ட்டின் காதல் போலியா? - அதிர்ச்சி வீடியோ

Also Read: வாடகைத் தாய் விதி மீறல் – நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது போலீஸ் புகார்

ஜிபி முத்து, அமுதவானன், மணிகண்டன் உள்ளிட்ட போட்டியளர்கள் ஆட்டத்தில் கலக்கி கொண்டு வரும் நிலையில் இன்னும் சில பேர் போட்டியில் கலந்து விளையாடவே ஆரம்பிக்கவில்லை. இந்த வாரம் முழுவதும் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி சண்டை போடுவது சோஷியல் மீடியாவரை பேசப்பட்டது. முத்து நடிக்கிறார் என்று தனலட்சுமி சொன்னதும் கண்ணீர்விட்டு அழுதுவிட்டார் ஜிபி முத்து. இவர்களின் சண்டைதான் இந்தவாரம் அதிகமாக பேசப்பட்டது.

ALSO READ  Bigg Boss Tamil 7: பிக்பாஸ் தமிழ் 7ல் இரண்டு வீடுகள் மட்டுமின்றி மற்றொரு புதிய விஷயமும் உள்ளது

Bigg Boss Tamil S6: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் யார் - வெளியான எலிமினேஷன் லிஸ்ட்

தற்போது இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் யார் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அந்த லிஸ்டில் தனலட்சுமி, ராம் ராமசாமி, மகேஷ்வரி, அசீம் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேருவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply