Home Trailer PS-1 Trailer Launched: பொன்னியின் செல்வன்-1 ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி உள்ளது

PS-1 Trailer Launched: பொன்னியின் செல்வன்-1 ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி உள்ளது

77
0

PS-1 Trailer & Audio Launched: மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பான் இந்தியா படம் பொன்னியின் செல்வன்-1 ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிய பொன்னியின் செல்வன்-1, இன்று (செப்டம்பர் 6ஆம் தேதி) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக லைவ் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Also Read: பொன்னியின் செல்வன் OTT உரிமை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது

இந்தியில் அனில் கபூர், தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் ராணா டக்குபதி, மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், கன்னடத்தில் ஜெயந்த் கைகினி ஆகியோர் ‘பொன்னியின் செல்வன்-1’ டிரைலருக்கு குரல் கொடுத்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சோழர்களின் பொற்காலம் உதயமாவதற்கு முன், வானில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றியது. சோழ அரசர்களில் ஒருவரை வால் நட்சத்திரம் பலி கேட்கிறது என்று சொல்ல. ‘மன்னன் கோவிலில் வஞ்சமும் துரோகமும் ஊடுருவுகின்றன’ இந்நிலையில் கமல் வாய்ஸ் ஓவரில் ‘பொன்னியின் செல்வன்’டிரைலர் தொடங்கியது. அதற்குள் படம் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்பதை மணிரத்னம் காட்டியிருக்கிறார்.

ALSO READ  Official Thunivu trailer date out: மாஸ் போஸ்டருடன் துணிவு படத்தின் ட்ரெய்லர் தேதி வெளியாகியுள்ளது

இந்த விழாவில் விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மாற்று உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கோநாடானர். மேலும் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு ஆடியோ மற்றும் தியேட்டர் டிரெய்லர் வெளியிட்டனர். 

PS-1 Trailer Launched: பொன்னியின் செல்வன்-1 ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி உள்ளது

இந்தப் படம் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பாத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Reply