Home Uncategorized Liger Trailer Review | லைகர் டிரைலர் விமர்சனம்

Liger Trailer Review | லைகர் டிரைலர் விமர்சனம்

61
0

Liger Trailer Review: இளம் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் முதல் பான்-இந்திய திரைப்படமான லைகர் ஆகஸ்ட் 25, 2022 அன்று திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் வெளியீட்டுக்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் இன்று டிரெய்லரை வெளியிட்டனர்.

லைகர் தெலுங்கின் டிரெய்லரை டோலிவுட் மெகாஸ்டார், சிரஞ்சீவி மற்றும் பான்-இந்திய ரெபெல் ஸ்டார் பிரபாஸ் இன்று வெளியிட்டனர். இதற்கிடையில், ஹைதராபாத்தில் உள்ள சுதர்ஷன் 35 எம். எம் தியேட்டரில் லைகர் பட குழு ரசிகர்களின் முன்னிலையில் லைகர் படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். டிரெய்லர் வெறித்தனமா இறப்பது தெரிகிறது மற்றும் இது ஒரு தரமான ஆக்‌ஷன் படமாகத் இருக்கும் என்று தெரிகிறது. ட்ரெய்லர் ஆரம்பத்தில் விஜய் தேவரகொண்டா வளையத்திற்குள் நுழைவதுடன், ரம்யா கிருஷ்ணாவின் குரலில் தனது மகனுக்கு லைகர் என்று பெயரிடுவதற்கான காரணத்தை விளக்குகிறது. “என் மகன் ஒரு கலப்பு, சிங்கத்திற்கும் புலிக்கும் பிறந்தவன்” என்று ரசிகர்களை உற்சாக படுத்துவது போல் இருப்பது தெரிகிறது.

ALSO READ  Maamanan: 'மாமன்னன்' முதல் சிங்கிள் - ஏ.ஆர் ரகுமான் இசையில் வடிவேலுவின் அற்புதமான குரலில் வெளியாகியுள்ளது

Also Read: Nayanthara: என்னது நயன்தாரா திருமணம் செய்தது ராசி இல்லையா – மக்கள் சந்தேகங்கள்

இது சாய்வாலாவின் கடினமான வாழ்க்கை பயணம், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், MMA பட்டத்தை வெல்லவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள், வழியில் உள்ள பல தடைகளை உடைத்து வெற்றி பெரும் கதைக்களம் என்று தெரிகிறது. விஜய் திக்குவாய் என்று காட்டப்பட்டுள்ளது, இது ஒரு முக்கிய சவால்களில் ஒன்றாகும் தெரிகிறது. அதில் அவர் வளையத்தில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் அவர் ஒரு வெறி தனமான பைட்டர் போல் இருப்பது தெரிகிறது.

Liger Trailer Review | லைகர் டிரைலர் விமர்சனம்

உணர்ச்சிகலை ஏற்ற தாழ்வுகளும் நிறைந்த கதை இது. லெஜண்ட் மைக் டைசனின் ஸ்டைலான அறிமுகம், அதைத் தொடர்ந்து லைகர் உடன் கலந்துரையாடல் பார்ப்பதற்கு விருந்தாக இருந்தது.”நான் ஒரு பைட்டர் என்று விஜய் கூறும்போது, ​​நீ ஒரு பைட்டர் என்றால் நான் என்ன?” என்று டைசன் பதிலளித்தார், இது பார்வையாளரை கவரும். டைசனின் இறுதி பிரேம்கள் ஒரு கில்லர் தோற்றத்தையும், டிரெய்லருக்கு சரியான முடிவையும் தருகிறது. பின்னணி இசை சிறப்பாக உள்ளது மற்றும் அது டிரெய்லரை உயர்த்துகிறது. ரம்யா கிருஷ்ணா சேரியிலிருந்து வரும் சாதாரண தாயாக தனது நடிப்பால் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

ALSO READ  Indian 2: நடிகர் சித்தார்த் 'இந்தியன் 2' வில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறக்கிறார்.

Also Read: Ileana D’Cruz: ஸ்டார் ஹீரோயின் சகோதரருடன் இலியானா டேட்டிங்

அனன்யா பாண்டே ஒரு நவநாகரீக கதாபாத்திரத்தில் காணப்படர், ரோனித் ராய் பயிற்சியாளராகக் காணப்படுகிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பூரி கனெக்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Leave a Reply