Actor gifts car to friend: தமிழ் சினிமாவில் நடிப்பாலும், தனித்துவமான இயக்கத்தாலும் ரசிகர்களிடம் விரைவாக கவனத்தை ஈர்த்தவர் நடிகர்-இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். தனது முதற்படமான ‘Love Today’ மூலம் இளம் தலைமுறையினரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அவர், தற்போது தன் அணியினருக்கு காட்டும் நன்றி மற்றும் அன்பு காரணமாக சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறார்.
Also Read:⭐ Dude OTT Release – Netflix-ல் 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆரம்பம்
சமீபத்தில் X (Twitter) பதிவொன்றில், தன் முதல் படத்திலிருந்தே இணை இயக்குநராக இணைந்து உழைத்து வரும் நெருங்கிய நண்பருக்கு பிரதீப் ஒரு புதிய கார் பரிசளித்தார் என்று தகவல் வெளிவந்தது. அந்த AD தொடர்ந்து பல வருடங்களாக பிரதீப்பின் படங்களில் உற்சாகமாக பணி செய்து வருவதோடு, அவரது கதையம்சங்களையும், கிரியேட்டிவ் சிந்தனைகளையும் வளர்க்க மிகவும் அருகில் இருந்து ஆதரவு வழங்கியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பகிர்ந்த ரசிகர்கள், “இது தான் ரியல் அன்பு”, “தனது பயணத்தில் பங்கெடுத்தவர்களை மறக்காத நல்ல மனசு”, “சினிமாவில் இப்படி மாதிரி உறவுகள் ரொம்ப அரிது” என பல பாராட்டுகளுடன் அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
Also Read:⭐ Thalaivar 173: தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த்? – தலைவர்173க்கு சூப்பர் அப்டேட்!
இந்த தகவல் வெளிவந்ததுடன், பிரதீப் ரங்கநாதனின் நன்றியுணர்ச்சி, நண்பர்களுக்கான லாயல்ட்டி, மற்றும் பணிவான மனசு மீண்டும் சினிமா உலகத்தில் பெரிய பேச்சு பொருளாகியுள்ளது. தொழில்நட்பங்களை மதிக்கும் விதத்தில் இளம் நடிகர்கள் எவ்வாறு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்கும் பிரதீப் எடுத்த இந்த முடிவு ஒரு சிறந்த உதாரணமாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு பக்கம், தற்போது பிரதீப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இப்படியொரு நல்ல மனசு கொண்ட நடிகர் மீது ரசிகர்களின் அன்பும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.



