நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா சமீபத்தில் ஒன்றாக பொதுவில் தோன்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடிகையும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சனம் ஷெட்டி தனது கருத்தை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மற்றும் மீனாட்சி சுரேஷ் தம்பதிகளின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தன.

இதற்கிடையில், விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மனுவில் தனது கணவர் திருமண நம்பிக்கையை பாதித்ததாகவும், மற்றொரு நடிகையுடன் உறவில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நடிகையின் பெயர் மனுவில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் பலர் அது த்ரிஷாவாக இருக்கலாம் என்று ஊகித்து பேசிவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக பொதுவில் தோன்றியிருப்பது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் கருத்து தெரிவித்த சனம் ஷெட்டி,
“இது சரியானதாக எனக்கு தோன்றவில்லை. மனைவியின் வேதனையை இப்படிப் புறக்கணிப்பது சரியல்ல. ஒரு நீண்டகால ரசிகையாக இது எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் சிலர் விஜயை ஆதரித்து, விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி நடத்திக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி,
“நீங்கள் எந்த கோணத்தில் வேண்டுமானாலும் இதைப் பார்க்கலாம். அதை நான் தடுக்கவில்லை,” என்று கூறியுள்ளார்.
மேலும் ஒருவர் “ஒரு உறவு முடிந்த பிறகு புதிய உறவுக்கு செல்ல முடியாதா?” என்று கேள்வி எழுப்பியபோது,
“மற்றொரு உறவுக்குள் செல்லும் முன் திருமணத்தை சட்டப்படி முடித்து அதன் பிறகு அறிவிப்பதே நெறிமுறைக்கும் சட்டத்திற்கும் சரியானது,” என்று அவர் பதிலளித்தார்.
அதே நேரத்தில் விஜய் மற்றும் த்ரிஷா நண்பர்களாக இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தையும் சனம் ஷெட்டி மறுக்கவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பே இத்தகைய குற்றச்சாட்டுகள் பேசப்பட்டு வரும் நிலையில், எந்த விளக்கமும் இல்லாமல் இப்படிப் பொதுவில் ஒன்றாக தோன்றுவது சரியான நேரமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.


