தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சிறப்பு பெற்ற நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைவதாகக் கூறப்படும் தகவல், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் 174-வது படமாக உருவாகும் இந்த புதிய படம், தற்காலிகமாக ‘Thalaivar 174 × KH 238’ என அழைக்கப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரம்மாண்ட திட்டம், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விரைவில் அறிவிப்பு?
சமீபத்திய தகவல்களின்படி, இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் சிறப்பு புரமோ வீடியோ செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026 அன்று வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சமீபத்தில், இந்த படத்திற்காக ஒரு ஸ்பெஷல் புரமோ ஷூட்டிங் , தற்போது அதன் பிந்தைய தயாரிப்பு பணிகள் (post-production) பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புரமோ, ‘ஜெயிலர்’ இயக்குநரின் வித்தியாசமான மற்றும் quirky ஸ்டைலில் உருவாகும் என கூறப்படுகிறது.
இசை & கூட்டணி
இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். இது ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு நிறுவனம்
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம்
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், ‘Thalaivar 174 × KH 238’ தொடர்பான நீண்ட நாள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



