Moonwalk Movie Update: தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களை மயக்கிய இரண்டு பேரின் பெயர் சொல்ல வேண்டுமென்றால், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் நடனப்புயல் பிரபுதேவா தான். ‘காதலன்’ படத்தின் மூலம் 1994ல் முதல் முறையாக இணைந்த இந்த இருவரும், தொடர்ந்து ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ போன்ற படங்களில் கொடுத்த ஹிட் பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் பிளேலிஸ்ட்ல் இடம்பிடித்தவையே.
Moonwalk Movie Update: ‘மின்சார கனவு’க்கு பிறகு 28 ஆண்டுகள் – புதிய இணைவு ‘மூன்வாக்’
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக வந்து இருக்கிறது. இயக்குனர் என்.எஸ். மனோஜ் இயக்கும் புதிய படம் ‘மூன்வாக்’, உலகப் புகழ் பெற்ற பாப் இசை மன்னர் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய அதே பெயரைக் கொண்ட நடன அசைவை அடிப்படையாகக் கொண்டது.
Also Read: EP2 – AI-Friendly Screenplay எழுதுவது எப்படி?
இந்த படத்தின் உலகளாவிய தியேட்டர் விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் பெற்றுள்ளது. ரகுமான் இசையில் பிரபுதேவா மீண்டும் தன் அசுர நடனத்தை காட்டப் போவதாகவே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பான்-இந்தியா என்டர்டெய்னராக உருவாகும் ‘மூன்வாக்’
இசை, நடனம், நகைச்சுவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படம் பான் இந்தியா அளவில் தயாராகி வருகிறது. யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் போன்ற நகைச்சுவை பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசை வெளியீட்டு உரிமையை லஹரி மியூசிக் பெற்றுள்ளது. குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் காமெடி கலந்த மியூசிக்கல் என்டர்டெய்னராக படத்தை உருவாக்கியதாக படக்குழு கூறியுள்ளது.
Moonwalk Movie Update: யோகிபாபுவின் சிறப்பு கெட்-அப் – இரட்டை கதாபாத்திரம் உறுதி!
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து, இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதற்கிடையில், புதிய அப்டேட்டாக, யோகிபாபு இரண்டு வேறு கதாபாத்திரங்களில் நடித்ததாக—“ஆட்டுக்கால் அழகு ராசா” மற்றும் “கவரிமான் நாராயணன்” என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டருடன் அறிவித்துள்ளது. இதனால் படத்தைச்சுற்றிய ஹைப் மேலும் உயர்ந்துள்ளது.



