தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார் நடிப்பில் மீண்டும் திரைக்கு வரவுள்ள அடுத்த படமாக தற்காலிகமாக ‘AK64’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தை அதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின் படி, மோகன்லாலுக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த சக்திவாய்ந்த கதாபாத்திரம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் மற்றும் படக்குழு மோகன்லாலை நேரில் சந்தித்து கதையை விளக்கியதாகவும், அவர் கதையைக் கேட்டு நேர்மறையான கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
மோகன்லால் தற்போது பல மலையாள படங்களில் பிஸியாக இருப்பதால், தனது கால அட்டவணையை பொருத்தே ‘AK64’ படத்தில் இணைவது உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒப்பந்தம் முடிந்த பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோகன்லால் ‘AK64’ படத்தில் இணைந்தால், தமிழ்–மலையாள ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய திரை நிகழ்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



