Vijayakanth: தமிழ் சினிமா மற்றும் அரசியலில் புரட்சிகர அடையாளமாக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த், தனது 71வது வயதில் நேற்று காலமானார். அவரது உடல் நேற்று இரவு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் நேற்று இரவு 10 மணியளவில் கேப்டன் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் உடலைப் பார்த்ததும் தளபதி விஜய் உணர்ச்சிவசப்பட்டதாகவும் காணப்பட்டார். கேப்டனின் மனைவி மற்றும் மகன்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். விஜயகாந்துக்கு விஜய் இறுதி அஞ்சலி செலுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் கேரியரில் கேப்டன் விஜயகாந்த் மிகப்பெரிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1993-ம் ஆண்டு வெளியான ‘செந்தூரபாண்டி’ படத்தில் விஜயகாந்தின் தம்பியாக விஜய் நடித்தார். அந்த படத்தை இயக்கியவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ‘சட்டம் ஒரு இருட்டரை’ படத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஆரம்ப காலத்தில் பெரிய பிரேக் கொடுத்தவர்.
#PHOTO | கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது கண்ணீர் சிந்திய நடிகர் விஜய்#SunNews | #RIPCaptainVijayakanth | #CaptainVijayakanth | #Vijayakanth | #விஜயகாந்த் pic.twitter.com/TfNZY2oaNo
— Sun News (@sunnewstamil) December 28, 2023
எஸ்.ஏ.சந்திரசேகர் காகவும், விஜய்க்காகவும் செந்தூரபாண்டி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தார் கேப்டன் விஜயகாந்த். விஜய் இன்று தமிழ் சினிமாவின் தளபதியாக வளர்ந்துள்ளார். நேற்று தனக்கு வழிகாட்டியாக இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.