Kollywood: நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் நிதி பிரச்சனையால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தின் மீதமுள்ள பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர் அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
நடிகர் நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் புதிய கட்டிடம் கட்ட துவங்கிய நிலையில் போதிய நிதி இல்லாததால் பணிகள் நிறுத்தப்பட்டன, சங்கம் கட்டிடத்துக்கான நிதி திரட்டும் பனி ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது, நடிகர், தயாரிப்பாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன் வந்து இன்று சங்க நிர்வாகிகளிடம் ரூ.1 கோடி காசோலையை வழங்கினார்.
Dear Udhaya, I sincerely thank u as a friend, producer, actor and now sports minister of Tamil Nadu govt for your contribution to our South Indian artistes association building efforts and your willingness to finish it as early as possible and also coming forward to help in any… pic.twitter.com/H40q6HAzvo
— Vishal (@VishalKOfficial) February 15, 2024
விஷால் சமூக வலைதளத்தில் பதிவிட்டு “அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பிற்கும், அதை விரைவில் முடிக்க நீங்கள் விரும்பியதற்கும், நண்பர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற முறையில் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.