Home TN News Shocking: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடிய பெண் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு...

Shocking: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடிய பெண் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியதாக தகவல்

58
0

Shocking: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் செயின்ட் மேரிஸ் ரோடு இல்லத்தில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய ஈஸ்வரி என்பவர் லாக்கரில் இருந்த விலை உயர்ந்த நகைகள் மற்றும் ஆபரணங்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டார் என்று நாம் செய்திகள் படித்தோம். தற்போது போலீஸ் விசாரணையில், ஈஸ்வரி தான் திருடிய நகைகளை வைத்து சோழிங்கநல்லூரில், ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியது தெரியவந்தது. தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, வீட்டின் மதிப்புக்கு, வங்கியில் கடன் வாங்கி இரண்டே ஆண்டுகளில் முழுமையாக செலுத்திவிட்டதாக தெரிகிறது.

ALSO READ  Kollywood: த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததற்காக மன்சூர் அலி கானுக்கு நீதிமன்றம் கண்டனம்

Also Raed; பத்து தல படத்தின் சென்சார் ரிப்போர்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை மயிலாப்பூரில் உள்ள நகைக்கடையிலும் போலீசார் சோதனை நடத்தி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான 100 சவரன் தங்க, வைர நகைகளை ஈஸ்வரி என்பவர் சட்டவிரோதமாக விற்றுள்ளனர். மேலும், ஐஸ்வர்யாவின் வீட்டில் கார் டிரைவராக பணியாற்றிய வெங்கடேஷ் என்பவர் ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ரஜினிகாந் மகள் வீட்டில் குற்றவாளிகள் இவ்வளவு பெரிய திருட்டுக்கு துணிந்துள்ளனர் என்ற தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ  Thalapathy: போக்குவரத்து விதிகளை மீறியதற்காக தளபதி விஜய்க்கு 500 ரூபாய் அபராதம்

Shocking: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடிய பெண் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியதாக தகவல்

இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தனது புதிய படமான ‘லால் சலாம்’ படப்பிடிப்பை தொடங்கினார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜீவிதா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

Leave a Reply