TTF Vasan: சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதையடுத்து Youtuber TTF வாசன் கைது செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ட்வின் த்ராட்லர்ஸ் என்ற பிரபல சேனலில் இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். வாசன் பைக்கில் வீலிங் செய்யும் போது விபத்துக்குள்ளானார்.
TTF வாசன் ஜாமீன் கோரி பலமுறை மனு தாக்கல் செய்தாலும் அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேலும், அவர் வாகனம் ஓட்டுவதை கண்டித்த நீதிபதி, அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்தார். 40 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த அவருக்கு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய TTF வாசன் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
Also Read: லியோ உலகம் முழுவதும் 15-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
TTF வாசன் “பைக் தான் என் வாழ்க்கை, என் ஆர்வத்தை என் தொழிலாக மாற்றினேன், அப்படி இருக்கும்போது, பத்து வருடமாக என் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது நியாயமில்லை. இது என் வாழ்க்கையை அழிப்பது போல என்று கூறினார். மேலும் இவர் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் மூலம் TTF வாசன் முன்னணி நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறாரா என்று நிருபர் ஒருவர் கேட்டார்.
அதற்கு வாசன், “நான் தொடர்ந்து பைக் ஓட்டுவேன், சினிமாவிலும் நடிப்பேன், என் ஆசையை விட்டுவிட முடியாது. என்னிடம் சர்வதேச ஓட்டுநர் உரிமம் உள்ளது, அதை தொடர்ந்து பைக்கிங் செய்வேன். அதைப் பெறவும் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன், எனது ஓட்டுநர் உரிமம் திரும்பப் பெறுவேன் என்ஸ்ரார். விபத்தின் போது எனக்கு ஏற்பட்ட காயத்தை விட, உரிமத்தை இழந்ததைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன்.”