Kollywood: த்ரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் மீது மன்சூர் அலிகான் தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முன்னதாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் த்ரிஷாவுடன் நடிப்பது குறித்து மன்சூர் அலிகான் தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி ரசிகர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தார்.
அவருக்கு எதிராக த்ரிஷா கடும் எதிர்ப்பை தெரிவத்தார், த்ரிஷாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி, குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நின்றார்கள். மேலும் பிரச்சனை சட்டப் பாதையில் சென்ற நிலையில் மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு விஷயத்தை முடித்து வைத்தார். ஆனால் த்ரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் மீது ரூ.1 கோடி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் கூறப்படும்போது, குரல் கொடுப்பது மனித இயல்பு என நீதிபதி தெரிவித்தார். மன்சூர் அலிகானின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.