Vadivelu: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த வடிவேலு, தொலைபேசியில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் என்னிடம் பேசி நலம் விசாரித்தார்.
வடிவேலு மீதுள்ள அனைத்து பிரச்சினைகள் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டது. வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு முதல் முறையாக சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என பேரில் புதிய படத்தில் நடிக்கிறார் வடிவேலு. தற்போது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கப்பட்டது. இந்த பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, முனிஸ்காந்த், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் பாடல்கள் கம்போசிங்கிற்காக டைரக்டர் சுராஜ், வடிவேலு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட லண்டன் சென்றிருந்தனர். பிறகு லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வடிவேலுக்கு மருத்துவமனை பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. பிறகு கொரோனா தொற்று குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து நேற்றைய தினம் வடிவேலு வீடு திரும்பியுள்ளார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த வடிவேலு, அதாவது தொலைபேசியில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் என்னிடம் பேசி நலம் விசாரித்தார். எதுக்கும் பயப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும் என்றார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அவர் வார்த்தைகள் என் மனதிற்கு பெரிய பலத்தை அளித்தது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்றார்.
அதன் பிறகு மீம்ஸ் கிரியேட்டர்கள் பற்றி பேசிய வடிவேலு, நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவுடன், நான் நடித்த படத்தில் பேசிய என் வசனத்தை வைத்தே கொரோனாவை விரட்டிவிட்டார்கள் அவர்கள். உண்மையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் புத்திசாலிகள் என்றும் அவர் பணியில் நகைச்சுவையாக தெரிவித்தார் நடிகர் வடிவேலு.