Home Political Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்ற பின் கைவிடப்பட்ட திரைப்படம் – இனி...

Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்ற பின் கைவிடப்பட்ட திரைப்படம் – இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்!

82
0

Udhayanidhi Stalin: நடிகர், தயாரிப்பாளர், சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் முதல்வர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி அரசைச்சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு தமிழக ஆளுநர் தலைமை வகித்தார்.

Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்ற பின் கைவிடப்பட்ட திரைப்படம் - இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்!

உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் கையெழுத்தாக 3000 ரூபாயாக இருந்த விளையாட்டு வீரர்களின் ஓய்வு ஊதியத்தை 6000 ரூபாயாக உயர்த்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். வாரிசு அரசியல் என்று பலவிமர்சனங்கள் பேசப்படுகிறது என்ற கேள்விக்கு தனது சிறப்பான செயல்கள் மூலமாக அதற்கு தகுந்த பதிலடி தருவேன் என்று கூறினார் அமைச்சர் உதயநிதி, தற்போது அவருக்கு அதிக பொறுப்புகள் இருப்பதால் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் தான் தனது கடைசி படம் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் தற்காலிகமாக ‘ஆர்.கே.எஃப்.ஐ – 54’ (RKFI – 54) என்ற பெயரில் நடிக்க கமிட்டாகியிருந்த படம் தற்போது கைவிடப்பட்டதாகவும் அறிவித்தார். தற்போது கமல் வேறு ஒரு நடிகருடன் இந்த படத்தை தொடர்வாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதிக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply