Home Political Rajini: ஆந்திராவில் அரசியல் பேசிய ரஜினிகாந்த் – அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது

Rajini: ஆந்திராவில் அரசியல் பேசிய ரஜினிகாந்த் – அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது

62
0

Rajini: பழம்பெரும் நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று விஜயவாடாவில் நடைபெற்ற விழாவில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரஜினி தனது உரையின் போது, ​​தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நாரா சந்திரபாபு நாயுடு குறித்து சில பரபரப்பான அரசியல் பேச்சியல் கூட்டத்தை அதிர வைத்தார்.

Also Read: தளபதி விஜய் தனது ரசிகர்களை அழைத்து தனது பாராட்டுகளை தெரிவிப்பது ஏன் தெரியமா?

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவுடன் தான் பேசியதாகவும், ஆந்திர மாநிலத்தின் எதிர்கால திட்டங்களை ஆந்திர முன்னாள் முதல்வர் அவரிடம் கூறியதாகவும் ரஜினி கூறினார். “எங்கள் முந்தைய சந்திப்பில், சந்திரபாபு 2047 வரை ஆந்திரப் பிரதேசத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டார் என்றார். அவரது திட்டப்படி அவரது பார்வை நிறைவேறினால், ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் முதல் மாநிலமாக இருக்கும். அவரது நல்ல நண்பராகவும், நலம் விரும்பியாகவும், ஆந்திராவுக்கான அவரது பணியை நிறைவேற்ற சந்திரபாபு காருவை கடவுளும் என்.டி.ராமாராவின் ஆன்மாவும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன், ”என்று ரஜினிகாந்த கூறினார்.

2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ரஜினியின் அறிக்கைகள் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

Leave a Reply