Home Political Kamal Haasan: தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் – கமல் அதிரடி திட்டம்

Kamal Haasan: தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் – கமல் அதிரடி திட்டம்

114
0

Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் தனது நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, நீண்ட நாள் கழித்து கமலுக்கு மாபெரும் வெற்றி படமாக விக்ரம் படம் அமைந்தது. அதோடு தமிழ்நாட்டில் பாகுபாலி படத்தின் வசூல் சாதனையை முறியடித்து 400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

Also Read: Gargi Review: கார்கி படத்தின் முதல் விமர்சனம் – தேசிய விருது பக்கா

இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தில் சுசின் ஷியாம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிறகு பிக் சீசன் 6 நிகழ்ச்சியும் நடத்த இருக்கிறார். அதோடு 24 ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார். இவ்வாறு சினிமா, டிவி நிகழ்ச்சி, அரசியல் என்று பிஸியாக இருந்து வரும் கமல்ஹாசன். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Kamal Haasan: தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் - கமல் அதிரடி திட்டம்

மக்கள்ளை சந்திக்கும் கமல்ஹாசன் 

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகதில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க போவதாக தெரிவித்துள்ளார்.

Also Read: Rajinikanth: இன்று இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த் – காரணம் இதுதான்

ALSO READ  TVK Official: இந்தத் தேதியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கௌரவிக்க உள்ளார் தளபதி விஜய்

2024 ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கட்சியினரை கேட்டுள்ளார். “சீரமைபோம் தமிழகத்தை” என்ற முழக்கத்தோடு பல கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்களாம். இந்த சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தனது அடிதளம் வலுவில்லாமல் இருக்கும் பகுதிகளில் இருந்து துவங்க போவதாக தனது பேச்சின் போது தெரிவித்தார். 

Also Read: PS-1: தமிழ் சினிமா நிலையை பார்த்து இந்தியா சினிமா வருத்தம்!

ALSO READ  Vijay: பவன் கல்யாண் வெற்றி குறித்து தளபதி விஜய் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Kamal Haasan: தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் - கமல் அதிரடி திட்டம்

கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்தாலோசித்து சுற்றுப்பயணம் இங்கிருந்து தொடங்கலாம் என்று திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் கமல். அதிரடியாக தமிழகதில் தனது சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் விரைவில் மேற்கொள்வார் என்று கட்சியின் நிர்வாகி தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள கமல் ரசிகர்களும் கமலை நேரில் காண மிகுந்த ஆர்வத்தோடும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள்.

 

Leave a Reply